பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல் - "இல்"


அறத்துப்பால் / இல்லறவியல் / இல்வாழ்க்கை / ௪௰௪ - 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.


அறத்துப்பால் / இல்லறவியல் / வாழ்க்கைத் துணைநலம் / ௫௰௨ - 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.


அறத்துப்பால் / இல்லறவியல் / விருந்தோம்பல் / ௮௰௪ - 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.


அறத்துப்பால் / இல்லறவியல் / பிறனில் விழையாமை / ௱௪௰௧ - 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.


அறத்துப்பால் / இல்லறவியல் / பிறனில் விழையாமை / ௱௪௰௨ - 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.


அறத்துப்பால் / இல்லறவியல் / அழுக்காறாமை / ௱௭௰ - 170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.


அறத்துப்பால் / துறவறவியல் / கூடாவொழுக்கம் / ௨௱௭௰௬ - 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.


அறத்துப்பால் / துறவறவியல் / கள்ளாமை / ௨௱௮௰௫ - 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.


அறத்துப்பால் / துறவறவியல் / கள்ளாமை / ௨௱௮௰௭ - 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.


அறத்துப்பால் / துறவறவியல் / அவா அறுத்தல் / ௩௱௬௰௩ - 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.


பொருட்பால் / அரசியல் / சிற்றினம் சேராமை / ௪௱௬௰ - 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.


பொருட்பால் / அரசியல் / தெரிந்து செயல் வகை / ௪௱௬௰௨ - 462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.


பொருட்பால் / அரசியல் / வலியறிதல் / ௪௱௭௰௨ - 472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்


பொருட்பால் / அரசியல் / சுற்றந் தழால் / ௫௱௨௰௬ - 526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.


பொருட்பால் / அரசியல் / பொச்சாவாமை / ௫௱௩௰௬ - 536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.


பொருட்பால் / அரசியல் / பொச்சாவாமை / ௫௱௩௰௮ - 538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.


பொருட்பால் / அரசியல் / கண்ணோட்டம் / ௫௱௭௰௭ - 577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.


பொருட்பால் / அரசியல் / ஒற்றாடல் / ௫௱௮௰௩ - 583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்


பொருட்பால் / அமைச்சியல் / சொல்வன்மை / ௬௱௪௰௪ - 644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.


பொருட்பால் / அமைச்சியல் / அவையறிதல் / ௭௱௰௩ - 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.


பொருட்பால் / படையியல் / படைமாட்சி / ௭௱௭௰ - 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.


பொருட்பால் / நட்பியல் / பேதைமை / ௮௱௩௰௪ - 834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.


பொருட்பால் / நட்பியல் / பெண்வழிச்சேரல் / ௯௱௯ - 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.


பொருட்பால் / நட்பியல் / பெண்வழிச்சேரல் / ௯௱௰ - 910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.


பொருட்பால் / நட்பியல் / சூது / ௯௱௩௰௪ - 934
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.


பொருட்பால் / குடியியல் / நன்றியில் செல்வம் / ௲௧ - 1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்


பொருட்பால் / குடியியல் / நன்றியில் செல்வம் / ௲௫ - 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.


பொருட்பால் / குடியியல் / குடிசெயல்வகை / ௲௨௰௧ - 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.


காமத்துப்பால் / கற்பியல் / படர்மெலிந்திரங்கல் / ௲௱௬௰௪ - 1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.


காமத்துப்பால் / கற்பியல் / பசப்புறு பருவரல் / ௲௱௮௰௮ - 1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.


காமத்துப்பால் / கற்பியல் / தனிப்படர் மிகுதி / ௲௱௯௰௮ - 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.


காமத்துப்பால் / கற்பியல் / நெஞ்சோடு கிளத்தல் / ௲௨௱௪௰௩ - 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.


பல முறை தோன்றிய
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

குறளின் தொடக்கம்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

குறளின் இறுதி
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22