இராகம்: பைரவி | தாளம்: ரூபகம் பல்லவி:காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி என்று கூறும்
அநுபல்லவி:காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணையதும் தன்னோடு
சரணம்:பூம்பட்டு மேனி தொடலைக் குறுந் தொடியிவளே
புணர்ந்தும் பிரிந்தும் மாலை வருத்தும் துயரைச் செய்தாளே
யாம்பட்டது தாம்படாத வாறதனாலே
யாங்கண்ணின் காண நகுப அறிவிலார்களே
மடலூர் தலையாமத்திலும் உள்ளுகின்றேனே
படல் ஒல்லா பேதைக் கென்றன் கண்ணும் உறங்கேனே
கடலன்ன காம நோயால் தான் உழன்றாலும்
மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கதும் உண்டோ