இராகம்: காப்பி | தாளம்: ரூபகம் பல்லவி:அவையறிந்து பேச வேண்டுமே - நண்பா
அவையறிந்து பேச வேண்டுமே
அநுபல்லவி:"அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மையவர்" எனும் திருக்குறளின்
சரணம்:கல்லார்முன் கல்லாராய்க் காணவும் வேண்டும்
கற்றவர்முன் கற்றவராய் விளங்கவும் வேண்டும்
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க சொல்லை
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் எல்லை
பயிர் வளரும் பாத்தியிலே நீர் சொரிந்தாற் போலவும்
பயனுணரும் படித்தவர்முன் பேசவேண்டும் சாலவும்
உயிர் வளர்க்கும் பாலமுதைச் சேற்றில் ஊற்றலாகுமா?
உரிய இனமல்லார்முன் பேசிப் பயன் காணுமா?