இராகம்: பூர்விகல்யாணி | தாளம்: ஆதி பல்லவி:தீயைவிடக் கொடிதாம் தீவினை தன்னை நீ
திரும்பியும் பாராதே மனமே
அநுபல்லவி:தீதான் தொட்டவரை மட்டிலுமே சுடும்
தீவினையாளரால் அவர் குலமே கெடும்
சரணம்:மன்னும் திறக்குறள் மணிமொழி சொல்லு
மறந்தும் பிறன்கேடு சூழாதே; நில்லு
தன்னிழல் தன்னைத் தொடர்வது போல
தன்வினை தன்னையே தாக்கும் அதாலே