தீவினையச்சம்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.   (௨௱௬ - 206) 

துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒரு போதும் செய்யாதிருப்பானாக  (௨௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.  (௨௱௬)
— மு. வரதராசன்


துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.  (௨௱௬)
— சாலமன் பாப்பையா


வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்  (௨௱௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀻𑀧𑁆𑀧𑀸𑀮 𑀢𑀸𑀷𑁆𑀧𑀺𑀶𑀭𑁆𑀓𑀡𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀶𑁆𑀓 𑀦𑁄𑀬𑁆𑀧𑁆𑀧𑀸𑀮
𑀢𑀷𑁆𑀷𑁃 𑀅𑀝𑀮𑁆𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀢𑀸𑀷𑁆 (𑁓𑁤𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala
Thannai Atalventaa Thaan
— (Transliteration)


tīppāla tāṉpiṟarkaṇ ceyyaṟka nōyppāla
taṉṉai aṭalvēṇṭā tāṉ.
— (Transliteration)


Let him, who seeks to be free from suffering, Not be a cause of suffering to others.

ஹிந்தி (हिन्दी)
दुख से यदि दुष्कर्म के, बचने की है राय ।
अन्यों के प्रति दुष्टता, कभी नहीं की जाय ॥ (२०६)


தெலுங்கு (తెలుగు)
చిక్కు లొరుల కెవుడు చేయని వాడైన
చిక్కులందుఁదాను చిక్కకుండు. (౨౦౬)


மலையாளம் (മലയാളം)
തനിക്ക് തിന്മയേൽക്കാതെ ജീവിക്കാനാഗ്രഹിപ്പവൻ തിന്മചെയ്യാതിരിക്കേണം സ്വയമന്യർക്കൊരിക്കലും (൨൱൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ದುಃಖಕ್ಕೆ ಕಾರಣವಾದ ಕೆಟ್ಟ ಕಾರ್ಯಗಳು ತನ್ನನ್ನು ಬಾಧಿಸಬಾರದು ಎಂದು ಇಚ್ಛಿಸುವವನು, ಇತರರಿಗೂ ತಾನು ಕೆಟ್ಟದನ್ನು ಮಾಡದಿರಬೇಕು. (೨೦೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
स्वकृतं दुष्कृतं स्वस्य भाविदु:खप्रदायकम्'।
इति चिन्तयताऽन्येषां न कार्या दुष्कृति: सदा॥ (२०६)


சிங்களம் (සිංහල)
දුක් වද වේදනා- විඳින්නට නොකැමති අය නපුරුකම් අනුනට - නො කළ යුතූමය කිසිම විදියක (𑇢𑇳𑇦)

சீனம் (汉语)
畏疾苦者, 不犯罪以害人. (二百六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Sa-siapa yang tiada ingin diri-nya di-dukakan oleh penderitaan, biar- lah dia menahankan diri-nya daripada melukakan orang lain.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
스스로 악을 피하고 싶은 사람은 타인에게 악행을 하지 않아야 한다. (二百六)

உருசிய (Русский)
Не сотвори зла другому, если не хочешь,,тобы зло обрушилось на тебя самого

அரபு (العَرَبِيَّة)
إن يرد احد أن ينجو من أي مصيبة فعليه أن لا يصيب احدا بالسوء (٢٠٦)


பிரெஞ்சு (Français)
Ne fais pas à autrui, le mal dont tu ne désires pas souffrir toi-même.

ஜெர்மன் (Deutsch)
Wer mochte, daß ihn das schruerzhaft Böse nicht verfolgt, soll anderen niemals Böses tun.

சுவீடிய (Svenska)
Den som icke vill att ofärd skall drabba honom må icke göra onda ting mot sin nästa.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quod injuriae naturam habet, alteri non inferat, qui non desiderat ipse eo, quod doloris naturam habet, vexari. (CCVI)

போலிய (Polski)
Jeszcze bardziej pogmatwasz tym swe położenie, Jeśli zdrożne popędy popędzasz.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22