இராகம்: பௌளி | தாளம்: ஆதி பல்லவி:ஒழுக்கத்து நீத்தார் பெருமை
உலகமெல்லாம் மதிக்கும்
உண்மை அறிவுடைமை
அநுபல்லவி:அழுக்கில்லாத மனத்தால்
அறிவெனும் அங்குசத்தால்
ஐம்பொறி யானைகளை
அடக்கிக் காக்கும் திறத்தால்
சரணம்:புலன்களின் வகை யெல்லாம் அறிந்தவ ரிடமே
பூவுலகே பொருந்தி அடங்கி நின்றி டுமே
நலந்தரும் நிறைமொழி மாந்தர் தம் பெருமை
நிலம்பெறும் மறைமொழி காட்டிடும் இது மெய்
இருமை வகை தெரிந்தே ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுல கெனத் தேர்ந்தார்
அருமை திருக்குறள்போல் அனைத்துயிர் வாழ
அன்புப் பணிபுரிவார் அருள் நலம் சூழ