இராகம்: சக்கரவாகம் | தாளம்: ஆதி பல்லவி:உச்சியில் நுனிக் கொம்பில் ஏறிடலாமா?
உள்ள அளவில் மீறிச் செலவிடலாமா?
அநுபல்லவி:அச்சு முறிந்தால் வண்டி நகருமோ தம்பி
அழகு மயிலிறகும் அதிகம் ஏற்றாதே நம்பி
சரணம்:தன்வலி பகைவலி சார்ந்திடும் துணைவலி
தான்புகும் வினைவலி யாவையும் பார்சரி
உன்வலி மிகும் என்றால் அடுபோர் தொடங்கு
ஒடியும் இடையில் என்றால் உரம் கொள்ளவே அடங்கு
ஆற்றின் அளவறிந்தே ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி என்பதே திருக்குறள்
ஏற்றிடச் செய்யும் இதே ஒப்புரவாண்மை
என்றும் குன்றாத மக்களாட்சியின் மேன்மை