வலியறிதல்

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.   (௪௱௭௰௭ - 477) 

தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும்  (௪௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.  (௪௱௭௰௭)
— மு. வரதராசன்


எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.  (௪௱௭௰௭)
— சாலமன் பாப்பையா


வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்  (௪௱௭௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀅𑀶𑀯𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀈𑀓 𑀅𑀢𑀼𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀯𑀵𑀗𑁆𑀓𑀼 𑀦𑁂𑁆𑀶𑀺 (𑁕𑁤𑁡𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aatrin Aravarindhu Eeka Adhuporul
Potri Vazhangu Neri
— (Transliteration)


āṟṟiṉ aṟavaṟintu īka atuporuḷ
pōṟṟi vaḻaṅku neṟi.
— (Transliteration)


Know the limit and grant with measure. This is the way to guard your treasure.

ஹிந்தி (हिन्दी)
निज धन की मात्रा समझ, करो रीती से दान ।
जीने को है क्षेम से, उचित मार्ग वह जान ॥ (४७७)


தெலுங்கு (తెలుగు)
దానమైన నున్న దానిని గుర్తించి
చేయువాని సిరికిఁ జెడుపురాదు. (౪౭౭)


மலையாளம் (മലയാളം)
സ്വന്തം നിലയറിഞ്ഞിട്ടേ ദാനമന്യന്ന് ചെയ്തിടൂ ദാനമങ്ങിനെ ചെയ്തെന്നാൽ ശേഷം സ്വത്തിന് രക്ഷയാം (൪൱൭൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕೊಡುವ ಸಾಮರ್ಥ್ಯವನ್ನರಿತು (ಇತರರಿಗೆ) ದಾನಮಾಡಬೇಕು; ಅದು ಸಿರಿಯನ್ನು ಕಾದುಕೊಂಡು ಬಾಳುವ ಮಾರ್ಗವೆನಿಸುವುದು. (೪೭೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
स्वशक्तिमनतिक्रम्य धर्ममार्गानुसारत: ।
दानशीलस्य विंत्त तु न कदापि विनश्यति ॥ (४७७)


சிங்களம் (සිංහල)
දෙතොත් යම් කෙනෙකූට - පමණ දැන ගෙන දියයුතූ එ පිළිවෙල සැම විට - තමන් දන රැකෙන හොඳමග වේ (𑇤𑇳𑇰𑇧)

சீனம் (汉语)
量計一己之資產, 而後布施, 始能貯財. (四百七十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Selalu-lah ingat akan sa-banyak mana kekayaan-mu dan biar-lah pcmberian-mu berimbangan pula dengan-nya: itu-lah chara untok memelihara dan membahagi harta-mu.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
자신의한계를알고재산내에서제공해야한다.그것이바로재산을저축할수있는유일한방법이다. (四百七十七)

உருசிய (Русский)
Действуй, идя по пути добра и верно рассчитывая силы. Лишь так ты сбережешь достояние и сможешь помочь другим людям

அரபு (العَرَبِيَّة)
وليكن فى ذهنك مقدار ثروتك ثم تجود طيق مقد ارها ذاك هو الطريق الصحيح فى حفظ وبقاء ثورتك (٤٧٧)


பிரெஞ்சு (Français)
Que celui qui fait la charité, donne en connaissance du quantum de ses Biens: c'est le moyen de. les conserver et d'en user.

ஜெர்மன் (Deutsch)
Angemessen weitergeben und seine Fähigkeiten kennen - dies ist die Weise, seinen Reichrum zu hüten und ausz uteilen.

சுவீடிய (Svenska)
Blott efter måttet av din förmåga må du idka givmildhet. Det är sättet att bevara och nyttja din egendom.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Mensuram flu minis (pecuniae) sciens largiaris ; haec ad opes ser- vandas recta erit via. (CDLXXVII)

போலிய (Polski)
Trzymaj przeto sam siebie w żelaznym rygorze. Skarbem państwa nie szafuj pochopnie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22