இராகம்: சுபபந்துவராளி | தாளம்: ஆதி பல்லவி:சினமே தவிர் செம்மையாகும் வாழ்வு
சீலமே பெற தருமே நலமே
அநுபல்லவி:மனமோ மலர் சினமோ செந்தீயாம்
மலரைத் தீய்க்கலாமோ
மணமதில் உண்டாமோ
சரணம்:சேர்ந்த பேரைக் கொல்லும் தேர்ந்த நட்பகற்றும்
சிரிப்பும் மகிழ்வும் சேராமல் நீக்கும்
சார்ந்தவர் குடியும் குலமும் கெடுக்கும்
தன்னைக் காக்கவேண்டின் சினம்காக்க நாளும்
"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை" என்பதால்
அறந்தாங்கவே ஆற்றும் குறள் சொல்
அறிந்தே தெளிந்தால் அருள்மேவும் வாழ்வில்