வெகுளாமை

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.   (௩௱௬ - 306) 

சேர்ந்தவரைக் கொல்லும் இயல்புடைய சினமானது, ‘தன் இனத்தார்’ என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்துவிடும்  (௩௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.  (௩௱௬)
— மு. வரதராசன்


சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.  (௩௱௬)
— சாலமன் பாப்பையா


சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்  (௩௱௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀷𑀫𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑀺 𑀇𑀷𑀫𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀏𑀫𑀧𑁆 𑀧𑀼𑀡𑁃𑀬𑁃𑀘𑁆 𑀘𑀼𑀝𑀼𑀫𑁆 (𑁔𑁤𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Sinamennum Serndhaaraik Kolli Inamennum
Emap Punaiyaich Chutum
— (Transliteration)


ciṉameṉṉum cērntāraik kolli iṉameṉṉum
ēmap puṇaiyaic cuṭum.
— (Transliteration)


The fire of anger which kills kinsmen Burns the life-saving boat of kith and kin.

ஹிந்தி (हिन्दी)
आश्रित जन का नाश जो, करे क्रोध की आग ।
इष्ट-बन्धु-जन-नाव को, जलायगी वह आग ॥ (३०६)


தெலுங்கு (తెలుగు)
ఆగ్రహంబు కాల్చు నైనవారిని దన్ను
అంటకొన్న వరకె మంట కాల్చు. (౩౦౬)


மலையாளம் (മലയാളം)
കോപിയെച്ചുട്ടഴിക്കുന്ന കോപം സത്യത്തിലഗ്നിയാം കോപിയോടൊട്ടിനിൽക്കുന്ന സർവ്വതും വെന്തുചാമ്പലാം (൩൱൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕೋಪವು ತನ್ನನ್ನು ಸೇರಿಕೊಂಡವರನ್ನು ಸುಡುವ ಬೆಂಕಿಯಂತೆ; ಅದು ಕುಲವೆನ್ನುವ ರಕ್ಷಣೆಯ ಹರಿಗೋಲನ್ನು ಸುಟ್ಟು ನಾಶಪಡಿಸುವುದು. (೩೦೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
आश्रयं नाशयेद्वह्नि: कोपाग्नि स्वाश्रितै: सह।
ज्ञानोपदेष्टन् दूरस्थान दहेन्नौकासमान् गुरून्॥ (३०६)


சிங்களம் (සිංහල)
කෝපය නමැති ගිනි- නෑ දෑ නමැති ඔරුවත් දවමින් උදව්වක්- ගන්ට ඉඩ නොතබා වනසවයි (𑇣𑇳𑇦)

சீனம் (汉语)
憤怒傷身, 亦損傷及其親屬. (三百六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kemarahan memusnahkan sa-tiap orang yang di-hampiri-nya: dan di-hanguskan pula keluarga mereka yang memelihara-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
분노는 화를 내는 사람만 파멸할뿐 아니라 위험한 순간에 도움을 받을 수 있는 관계의 사람도 파멸시킨다. (三百六)

உருசிய (Русский)
Огонь злобивости человека, охваченного злобой,,азрушит челн жизни его вместе с его близкими

அரபு (العَرَبِيَّة)
الغضب يهلك كل رجل لا يكظم عيظه بل هو يحرق جميع افراد عائلته الذى يربيه فى نفسه (٣٠٦)


பிரெஞ்சு (Français)
Le feu tue ceux qui l’approchent; la colère vous détruit ainsi que votre entourage.

ஜெர்மன் (Deutsch)
Der Ärger tötet selbst den, den er uniarmt – er verhrennt das Floß «Gute Freundschaft».

சுவீடிய (Svenska)
Vreden förtär vredens människor och bränner upp vänskapens trygga räddningsplanka.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
lgne mortifero irae etiam ratis salutifera amicorum comburetur. (CCCVI)

போலிய (Polski)
Zniszczy to, coś przez lata starannie wymościł, I uderzy w twą własną rodzinę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நெருப்பும் கோபமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

நெருப்புக்குச் சேர்ந்தாரைக் கொல்லி என்னும் ஒரு பெயர். அது காரணப் பெயர் என்று கூறுவார்கள்.

ஒரு பொருளை தீண்டிய நெருப்பானது, அந்தப் பொருளையும் அழித்துத் தானும் இல்லாமல் அழிந்து விடுகிறது. அதனால் அது சேர்ந்தாரைக் கொள்ளக்கூடியதாக ஆகிறது.

அதுபோல, நெருப்பினும் கொடுமையான கோபம், ஒருவனுக்கு ஏற்படுமானால், அவனை மட்டுமல்லாமல், அவனுக்கு சுற்றத்தாராய் நின்று, துன்பக் கடலிலிருந்து அவனைப் பாதுகாக்கும் தெப்பம் போன்ற அவனுடைய சுற்றத்தாரையும் சுட்டு எரித்துவிடும்.

அதாவது அவனிடமிருந்து கோபமானது அவர்களை விலக்கிவிடும்.

ஆகவே, கோபம் கொள்பவனுக்குப் பாதுகாப்பு (துணை) என்பதே இல்லாமல் போய்விடும்.


சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22