பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல் - "இன்பம்"


அறத்துப்பால் / துறவறவியல் / அவா அறுத்தல் / ௩௱௬௰௯ - 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.


பொருட்பால் / அரசியல் / ஆள்வினையுடைமை / ௬௱௰௫ - 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.


பொருட்பால் / அரசியல் / இடுக்கண் அழியாமை / ௬௱௨௰௮ - 628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.


பொருட்பால் / குடியியல் / இரவு / ௲௫௰௨ - 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.


காமத்துப்பால் / கற்பியல் / படர்மெலிந்திரங்கல் / ௲௱௬௰௬ - 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.


பல முறை தோன்றிய
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

குறளின் தொடக்கம்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

குறளின் இறுதி
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22