இராகம்: வாசஸ்பதி | தாளம்: ஆதி பல்லவி:பாட்டுடைத் தலைவி என் பைந்தமிழ்க் காதலி
காட்டும் புலவி நுணுக்கம்
காதால் வாழ்வில் எனை அவள் வசப்படுத்தும்
அநுபல்லவி:கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்றே வெகுண்டுரைக்கும்
சரணம்:பட்டும் படாமலும் என் பக்கத்திலே இருப்பாள்
தொட்டால் சிணுங்கிடுவாள் தோளில் முகம்கவிழ்ப்பாள்
விட்டுச் செல்வேனோ என்றென் விழிமேல் விழியை வைப்பாள்
வேண்டிப் பணிந்திட்டாலும் வித்தை எங்கே கற்றீர் என்பாள்
அச்சுப் பதுமையைப் போல் அசையாமல் வீற்றிருப்பாள்
ஆசை தீரப் பார்த்திட்டாலும் யாரை எண்ணிப் பார்த்தீர் என்பாள்
இச்சென்று தும்மினாலும் எவளோ நினைத்தாள் என்பாள்
இப்படியே எதிலும் ஊடிப் பின் கூடிக் கொள்வாள்