ஒருவனுடைய நிழலானது காலை வேளையில் மிகப்பெரிதாக நீண்டு காணப்படுகிறது. நேரம் ஆக, ஆக, உச்சிப்பொழுதில் அந்த நிழல் சுருங்கி, முடிவில் அவனுடைய காலின் கீழேயே ஒடுங்கிவிடுகிறது.
அதுபோல, ஒருவன் தீமை செய்யும்பொழுது, யாருக்கோ செய்வதாகத்தான் அவன் நினைக்கிறான்.
ஆனால் நாள் ஆக ஆக அந்த தீமையானது தனக்கே பகையாகி அவனையே கெடுத்து அழித்துவிடுவது நிச்சயம். எனினும், தீமை செய்யும்பொழுது, அவன் உணர்வதில்லை.
ஒருவன் செய்த தீய செயல் நிழல்போல அவனைத் தொடரும் என்று மக்கள் கூறுவார்கள்.