அவையறிதல்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.   (௭௱௰௨ - 712) 

சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், தாமிருக்கும் அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை உணர்ந்தே, சொல்ல வேண்டும்  (௭௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.  (௭௱௰௨)
— மு. வரதராசன்


மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.  (௭௱௰௨)
— சாலமன் பாப்பையா


சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்  (௭௱௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀝𑁃𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀦𑀷𑁆𑀓𑀼𑀡𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀓 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀷𑁆
𑀦𑀝𑁃𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆𑀢 𑀦𑀷𑁆𑀫𑁃 𑀬𑀯𑀭𑁆 (𑁘𑁤𑁛𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Itaidherindhu Nankunarndhu Solluka Sollin
Nataidherindha Nanmai Yavar
— (Transliteration)


iṭaiterintu naṉkuṇarntu colluka colliṉ
naṭaiterinta naṉmai yavar.
— (Transliteration)


Should skilled orators wish to speak, Let them study the occasion with care.

ஹிந்தி (हिन्दी)
शब्दों की शैली समझ, जिनको है अधिकार ।
सभासदों का देख रुख़, बोलें स्पष्ट प्रकार ॥ (७१२)


தெலுங்கு (తెలుగు)
మాట తేట లెఱుగు మహనీయలందఱు
నున్న చోటెఱింగి యచ్చరింత్రు. (౭౧౨)


மலையாளம் (മലയാളം)
വഴിക്ക് വഴികാര്യങ്ങൾ നല്ലവാചകഭം‍ഗിയിൽ വ്യക്തമായുരചെയ്യുന്നു വാക്കിൽ സ്വാധീനമുള്ളവർ. (൭൱൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮಾತಿನ ನಡಾವಳಿಯನ್ನು ಅರಿತ ಒಳ್ಳೆಯ ಗುಣಶಾಲಿಗಳು (ಸಭೆಯ) ಅವಕಾಶವನ್ನು ತಿಳಿದುಕೊಂಡು ಚೆನ್ನಾಗಿ ಗ್ರಹಿಸಿ ಮಾತನಾಡಲಿ. (೭೧೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
साभिकानां रुचिं बुद्‍ध्वा दोष: शब्दथियोर्यथा ।
न ज्ञायेत तथा स्पष्टं सभायामुच्यतां वच: ॥ (७१२)


சிங்களம் (සිංහල)
කතා කරනා විට - එන වැරදි විමසා දැන නිවැරදිව කිවයුතූ - බස් වහර දත් උගත් පඩුවන් (𑇧𑇳𑇪𑇢)

சீனம் (汉语)
語於大衆,應注意其情緖反應,再謹愼爲言辭. (七百十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
O dikau yang telah di-anugerahi kepetahan berbichara! Tentukan- lah perasaan pendengar2-mu dahulu dan kemudian uchap-lah sa- lepas pertimbangan yang hati2.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
웅변술이있는훌륭한사람들은청중의특성과시간에맞추어단어를사용한다. (七百十二)

உருசிய (Русский)
Умудренные опытом ораторы должны выбирать удобное время и изучить аудиторию и лишь потом держать речь

அரபு (العَرَبِيَّة)
أيها الرجل الذى برعت أنت فى فن البلاغة إفهم أولا طبائع وأمزجة المستمعين لك ثم تحدث اليهم بعد كل تفكر وتدبر (٧١٢)


பிரெஞ்சு (Français)
Que les hommes de bien, qui ont étudié et connu par expérience la marche de la parole, se rendent compte de l'efficacité de bonnes paroles, et parlent très clairement et sans commettre de fautes.

ஜெர்மன் (Deutsch)
Diese Guten, die den Gebrauch der Worte kennen, sollen zur rechten Zeir mit klarer Kenntnis sprechen.

சுவீடிய (Svenska)
Må goda män som har förvärvat talets gåva välja lägligt tillfälle och så tala med beprövad insikt.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Opportunitatem sciens bono judicio verba faciat cursum dicendi sciens vir bonus. (DCCXII)

போலிய (Polski)
Nie zaczynaj, nie znając gruntownie przedmiotu, Abyś całkiem go nie przeinaczył.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22