நெஞ்சோடு கிளத்தல்

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.   (௲௨௱௪௰௩ - 1243) 

நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்று நினைக்கும் தன்மை இல்லையே!  (௲௨௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!  (௲௨௱௪௰௩)
— மு. வரதராசன்


நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.  (௲௨௱௪௰௩)
— சாலமன் பாப்பையா


பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?  (௲௨௱௪௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀷𑁆𑀧𑀭𑀺𑀢𑀮𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑁂 𑀧𑀭𑀺𑀦𑁆𑀢𑀼𑀴𑁆𑀴𑀮𑁆
𑀧𑁃𑀢𑀮𑁆𑀦𑁄𑀬𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀇𑀮𑁆 (𑁥𑁓𑁤𑁞𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Irundhulli Enparidhal Nenje Parindhullal
Paidhalnoi Seydhaarkan Il
— (Transliteration)


iruntuḷḷi eṉparital neñcē parintuḷḷal
paitalnōy ceytārkaṇ il.
— (Transliteration)


O heart, what use to stay here and pine When he who caused this sickness is heartless?

ஹிந்தி (हिन्दी)
रे दिल ! बैठे स्मरण कर, क्यों हो दुख में चूर ।
दुःख-रोग के जनक से, स्नेह-स्मरण है दूर ॥ (१२४३)


தெலுங்கு (తెలుగు)
ఏను నీవు వగచి యేమౌను హృదయా
వలపుగాడు కరుణ దలుపఁడేని. (౧౨౪౩)


மலையாளம் (മലയാളം)
നെഞ്ചേനീയവരെച്ചിന്തിച്ചാവൽ കൊള്ളുന്നതെന്തിനായ്? നമുക്ക് ദുഃഖം നൽകുന്നോർക്കതു പോൽ ചിന്തയില്ലയേ! (൲൨൱൪൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಓ ಮನಸ್ಸೇ, ನನ್ನೊಡನಿದ್ದು ನೀನು ಅವರನ್ನು ನೆನೆದು ದುಃಖಿಸುವುದೇಕೆ ಈ ದಾರುಣವಾದ ಯಾತನೆಯನ್ನುಂಟು ಮಾಡಿದ ಅವರಲ್ಲಿ (ಸ್ವಲ್ಪ ಮಾತ್ರವೂ) ಪ್ರೇಮ ಸ್ಮರಣೆ ಇಲ್ಲವಲ್ಲ! (೧೨೪೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
हे चित्त ! मय्युषित्वा त्वं स्मृत्वा तं खिद्यसे कुत: ।
खेदप्रद: प्रियो मां तु स्मृत्वा नायाति चान्तिकम् ॥ (१२४३)


சிங்களம் (සිංහල)
දයාවක් නො මැතිව - දුක් දෙන්නහුගෙ හමු වේ ජීවත්වීම් වස් - සිතා ඇයි? දුක් වන්නේ සොවගින් (𑇴𑇢𑇳𑇭𑇣)

சீனம் (汉语)
心乎! 空留於此, 思念良人, 有何所用? 良人久忘吾辈矣. (一千二百四十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apa-lah guna-nya kita dudok di-sini dan berduka lara kerana memi- kirkan-nya, O Hati-ku? Dia yang menjadikan kita merana sa-bagini tidak pun mengenangkan kita.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
상사병을초래한 그가 그녀를 사랑하지않기때문에, 애인에대한그리움과 고통은헛된일이다. (千二百四十三)

உருசிய (Русский)
Какой толк, мое сердце, страдать вместе со мной, думая о милом? Видно, он не вспоминает о нас и не знает о той боли, которую причиняет нам разлука

அரபு (العَرَبِيَّة)
أيها القلب! ما هي فائدة جلوسك ههنا والتذكر والندب على فراق الحبيب الذى قد سبب لك هذه الآلام وهو لا يتـذكر عنك (١٢٤٣)


பிரெஞ்சு (Français)
O mon cœur! (tu ne vas pas à lui et tu ne meurs pas ici), tu restes et pourquoi souffres tu en pensant à lui? Moi, je n'aurai jamais pitié de celui qui m'a causé cette douleur et je ne penserai pas à lui.

ஜெர்மன் (Deutsch)
Warum erinnerst du dich, leidest und denkst an ihn, mein Herz - es gibt keine wohlwollenden Gedanken an ihn, der dieses Leiden verursachte.

சுவீடிய (Svenska)
Vartill tjänar det att dröja här, mitt hjärta, under grubbel och klagan? Hos honom som vållade mig denna kärlekssorg finns ju ändå ingen tanke på medlidande.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Auirne mi! exspectando ct cogitarulo quid crueiaris ? In eo, qui acerbum dolorem nobis intulit, cogitatio nos eommiserans nulla est. (MCCXLIII)

போலிய (Polski)
Czemu, serce, ten człowiek tak z tobą się droczy? Nie ma wcale litości nad nami.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22