Raga: ஆபோகி | Tala: ஆதி பல்லவி:அழுக்காறடையாதே - நண்பா
அழுக்காறடையாதே
அநுபல்லவி:"அழுக்காறென்பதே ஒரு பாவி
திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்" அதனால்
சரணம்:பொறாமை உள்ளவர் மனம் புகைந்திடும் கொள்ளி
புத்தியுள்ளோர் நகையாடுவர் எள்ளி
பெறாதிது நன்மதிப்பும் பெருங்குழி தள்ளி
பெருமை எல்லாம் கெடுக்கும் வறுமைநோய் அள்ளி
சஞ்சலமாகும் பொறாமையின் வீடு
சதிகாரர் நேசமே அவர்க்குடன்பாடு
கொஞ்சமோ இதனால் வந்திடும் கேடு
கூடாது இதைவிட்டே குறள்வழி நாடு