Raga: மகாநந்தி | Tala: ஆதி பல்லவி:வான முகிலே வருக-உயர்
வான முகிலே வருக
வள்ளுவர் உள்ளங் கண்ட
மாமழை நீ வருக
அநுபல்லவி:தானம் தவமிரண்டும்
தங்கிடவே உலகில்
வானகம் நீ வழங்கும்
வண்மையைப் போற்றிடுவோம்
சரணம்:"நீரின்றி அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வானின் றமையாது ஒழுக்கம்" என்பதை ஏற்கும்
ஏரின் உழவு முதல் எத்தொழிற்கும் உதவி
பாரின் பசியகற்றும் பைம்புனலே வணக்கம்