Raga: தோடி | Tala: ரூபகம் பல்லவி:ஆய்ந்து பார்த்துக் கொள்ளவேண்டுமே - நட்பை
ஆய்ந்து பார்த்துக் கொள்ளவேண்டுமே
அநுபல்லவி:ஆய்ந்தாய்ந்து பாராதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் என்றே நண்பரை
சரணம்:கொடுத்தும் கொளல் வேண்டும் குடிப்பிறந்தார் நட்பு
குற்றமில்லாருடன் கூடுவதும் பெட்பு
இடித்தழச் சொல்லுவார் இணக்கமே நல்லது
இவ்வுலகின் நடை அறியவும் வல்லது
மாட்டியே துன்பத்தில் கைவிடு வோரே
மாய்த்திடும் கூற்றினும் துயரிழைப் போரே
கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல் என்னும் தமிழ்மறை