Raga: அட்டாணா | Tala: ஆதி பல்லவி:நன்றி யில்லாத செல்வம் நாய் பெற்ற தெங்கம் பழம்
நயன் காணுமோ ஒரு
பயன் காணுமோ அறிவீர்
அநுபல்லவி:குன்றுபோல் செல்வப் பொருள் குவித்து வைத்திருந்தாலும்
கொண்டவர் நுகரா விடில்
கண்ட பயன் ஏது சொல்வீர்
சரணம்:எச்சமென்றே தேனும் இருக்குமோ சொல்வதற்கு
ஈதல் இயல்பிலாதான் பெற்ற வாழ்வும் எதற்கு
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்த தென்னும் துச்சமாக யாரும் எண்ணும்
வாட்டத்தைப் போக்காதவர் வறியோர் பசியாற்றாதவர்
வடிவழகின் குமரி மணமின்றி மூத்தாற் போலாம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப்பொறை என்றே குறளும் சொல்லும்