Raga: பூரி கல்யாணி | Tala: ஆதி பல்லவி:குடியென்னும் குன்றாத விளக்கேற்றுவோம் - என்றும்
குலந்தரும் செல்வம் தரும்
குறள்வழியைப் போற்றுவோம்
அநுபல்லவி:குடி கெடுக்கும் சோம்பலின் இருள்படியாமல்
கொடும் நெடுநீர் மறவிதுயில் கொண்டு மடியாமல்
சரணம்:சோம்பர் எவராயினும் தேம்பியே திரிவர்
சூழும் குடிப் பெருமை தாழும்படி அலைவர்
தீம்புக் கிடமாம் இந்தச் சோம்பலையே களைவோம்
தேறும் நம் நாட்டின் செல்வம் செழிக்கும் வகை புரிவோம்
மடியை மடியாக ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டுபவர் எனப் பெறுவோம் நிலையை
குடியாண்மையுள் வந்த குற்றமெல்லாம் தவிர்ப்போம்
மடியாண்மை மாற்றும் நல்ல முயற்சி வழி நடப்போம்