Raga: எதுகுலகாம்போதி | Tala: மிஸ்ரசாப்பு பல்லவி:ஆசையெல்லாம் விடுத்தே
அமையும் துறவிகளே
அருளின் விளக்கம் என்போம்
அநுபல்லவி:பாசபந்தம் கடந்தே பகையாம் ஐம்புலன்வென்றே
பற்றற்றான் தாளிணையை
பற்றும் மெய்ஞ்ஞானம் கொண்டே
சரணம்:மாசு மறுவில்லாத மனமும் குணமும் சேர
மனிதன் யான் எனதென்னும் மமதை விலகிப்போக
இயேசு புத்தர் இளங்கோ இராமலிங்கர் மகாத்மா
இதயம்போல் அருள் உதயமாகவே
எண்ணும் குறள் வழி இன்புற்றோங்கவே