Raga: உமாபரணம் | Tala: ரூபகம் பல்லவி:நடு நிலைமை தவறி நடக்காதே
நண்பர் சுற்றமென்றே உன்
நாவை வளைக்காதே
அநுபல்லவி:அடுபகைவர் எனினும் அன்புடையோர் எனினும்
அறிவுறும் தகுதியால்
சரி சமமாய்க் கருதும்
சரணம்:மனத்தை ஒளித்துவைத்து மன்றோரம் சொல்பவர்
வாய்மைக்கிடம் தராமல் வழக்கழிவு செய்பவர்
தனத்தை முன் கொட்டினாலும் சாய்ந்துவிடாதே
தன்னலப் பித்துக்கொண்டே தவிறி விழாதே
"செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்புடைத்து" எனும் வள்ளுவம்
ஒப்பும் நின் வாழ்விதனால் உயர்நிலை காணும்
ஓதும் நல்லடக்குமும் ஒழுக்கமும் பூணும்