Raga: ரவிசந்திரிகா | Tala: ஆதி பல்லவி:செல்வத்துள் செல்வம் செவிச் செல்வமே
செல்வத்துள் ளெல்லாம் தலையாகுமே
அநுபல்லவி:கல்வியின் பயனே கேள்வியாலன்றோ
கருதும் பொருள் காண வேறுண்டோ
சரணம்:வழுக்கும் நிலத்தில் ஊன்றும் கோலைப் போல
வலிவாய் நடக்க உதவும் மென்மேலே
ஒழுக்க முடையார் வாய்ச் சொல்லதாலே
உண்டாகும் திண்மை கொண்டாடும் உண்மை
புவியிலோர் விலங்கும் புசிக்கும் உணவு
போற்றும் கேள்விதான் மாந்தரின் உயர்வு
செவிக் குணவில்லாத போழ்தே சிறிது
வயிற்றுக்கும் ஈயும் குறளே இனிது