மனிதனுக்கு காதுகள் இருப்பது எதற்காக? உண்மையான கேள்வி அறிவை பெறுவதற்காகவே காதுகள் அமைந்துள்ளன.
காதுகள் இருந்தும், கேள்வி அறிவை பெறக்கூடிய ஆர்வம் ஒருவனுக்கு இல்லை என்றால், அவனைப் பற்றி என்ன நினைப்பது என்றால், அப்படிப்பட்டவனின் காதுகளுக்கு வேறு எல்லா ஒலிகளை கேட்கும் தன்மை இருந்தாலும், அவை செவிட்டு தன்மை உள்ளனவே. அதாவது, அவன் செவிடனே!
எங்கேயாவது எவராவது உரக்கப் பேசினால் அல்லது பலமான ஓசை கேட்டால் காதைத் தொளைக்கிறது என்று கூறுகிறோம். அதுபோல, அறிவு மொழிகள் துளைக்கப்படாத செவி என்று உணர்த்தப்படுகிறது.