Raga: செஞ்சுருட்டி | Tala: ஆதி கண்ணிகள்:வலியார் பகையை விட்டே மெலியார் பகைமேற் கொள்ள
வழியிதை யார்க்கும் சொல்லும் பகை மாட்சி
பலி கொடுக்கா திருக்கப் பார்த்து வழி நடக்கப்
பயில் வதினால் சிறக்கும் தன்னாட்சி
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு கண்டீர்
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக் கறிவீர்
நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்குமே எளிதாகும்
பாங்கினில் உறைந்தே தீங்கினைப் புரிபவர்
பகையைக் கொடுத்தும் கொள்ளல் இனிதாகும்
அறிவும் குணமும் இல்லார் அஞ்சும் இயல்புடையார்
அவர் பகை கொண்டால் இன்பம் தந்திடுமே
புரியும் வழியை நோக்கிப் பொல்லாப் பழியை நீக்கி
பொருந்திடச் செய்யும் திருக்குறள் நயமே