Raga: தோடி | Tala: ஆதி பல்லவி:வள்ளுவர் கண்ட திருநாடு - இந்த
வையக மெல்லாம் இதற்கில்லை ஈடு
அநுபல்லவி:தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வமும் சேர்வதுநாடு என்றே திகழும்
சரணம்:வருக வருக வென்னும் மாமலைத் தோற்றம்
வருபுனல் ஊற்றுடன் மழையும் பாராட்டும்
பெருகிடும் செல்வமுடன் விளைவின்பமும் போற்றும்
பேரன்பு காட்டி மக்கள் பசிப்பிணியை ஆற்றும்
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல் குறும்பும் இல்லாத நாடாகவே நிலைக்கும்
வல்லரண் கொண்டதாக வாழ்வும் வளமும் பொங்கும்
எல்லோரும் வாழும் நல்ல இசைமுரசும் முழங்கும்