Raga: சாமா | Tala: ரூபகம் பல்லவி:நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்ததென்
பண்பியார்க் குரைக்கோ பிற
அநுபல்லவி:உயர்ந்த நல்ல நிலையில் உள்ளார் அவரே என்றால்
உள்ளபடி என்மேனி பசலை நிறம் பெறுக
சரணம்:புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக் கொள்வற்றே பசப்பெனவே குறளில்
சொல்லிய விளக்கற்றம் பார்க்கும் இருள் போல் கொண்கன்
மெல்லியென் முயக்கற்றம் பார்க்கும் விந்தை என்னேடி
நேயமிகும் காதலர் நீங்கிச் செல்கின்றார் அதோ
நேரிழை யென் பொன்மேனியில் பசலை நிறம் பார் இதோ
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறாக
நோயும் பசலையுமே தந்தாரடி என் பாங்கி