Raga: செஞ்சுருட்டி | Tala: ஆதி பல்லவி:சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண் - பாங்கி
நறுமலர் நாணின கண்
அநுபல்லவி:அருமை மணாளரின் பிரிவை ஆற்றாமலே
அந்தோ உறுப்பு நலன்
அழிதலுக் கென்ன செய்வேன்
சரணம்:கோரிக்கை நிறைவேறிக் கூடிக் களித்திருந்தோம்
குறையும் பொருளை வேண்டி நிறைபொருள் எனை மறந்தார்
வாரித் தழுவிய நாள் பூரித்த தோளிரண்டும்
வாடி மெலிந்ததுவே வளையும் கழன்றதுவே
உண்ணும் உணவும் வேண்டா வெறுப்பாகக் கசந்தது
ஊரிற் பறை அறைய உண்கண்ணும் பசந்தது
எண்ணும் நெஞ்சே நீ அந்தக் கொடியவர் முன் செல்வாயா?
என்தோளின் பூசல் சொல்லிப் பெருமையும் கொள்வாயா?