Raga: சண்முகப்பிரியா | Tala: ஆதி பல்லவி:செய்ந்நன்றி அறிதலே சிறப்பல்லவோ
தேடிவந்து நம்மைக்
கூடி நின்றே உதவும்
அநுபல்லவி:எய்தும் துன்பம் கண்டு இரக்கமுடன் வந்து
எண்ணிய உதவியைத் திண்ணமதாய்ப் பிறர்
விண்ணினும் மண்ணினும் மேம்படவே தரும்
சரணம்:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்றெனக் கொள்ளுவோம்
கொன்றன்ன இன்னா செய்யினும் அவர் செய்த
குணமிகு நன்றி ஒன்றாயினும் கருதிட
மணமிகும் வாழ்க்கையில் குறள்மொழி மருவிடும்