Raga: கர்நாடகதேவகாந்தாரி | Tala: ஆதி பல்லவி:கரப்பினும் கையிகந் தொல்லா - நின்உண்கண்
உரைக்க லுறுவ தொன்றே
உண்டெனும் குறளில் கண்டதும் புரிதல்
அநுபல்லவி:சிறப்புறும் கண்ணிறைந்த காரிகை நீயே
சீர்பெறும் பெண்ணிறைந்த நீர்மை கொண்டாயே
சரணம்:அழகு மணி மாலையுள் நூலென ஓடி
அரும்பும் இளநகையின் மலர் மணமாகி
பழகும் குறிப்பறி வுறுத்தலில் மேவி
பாவையோடு திருக்கோவையும் பயிற்றும்
ஆவலோடு தமிழ்க் காவிய மியற்றும்
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவென்னும் பண்ணினால்
தண்ணெனும் தாமரை முகத்தினள் எண்ணினால்
தாளும் தோளும் கைவளையாலும் நோக்கும்
தன்மை நன்மை வழி கொண்டென்னைச் சேர்க்கும்