அழகான பெண் ஒருத்தி, பருவ வயதில் கணவனுடன் சேர்ந்து வாழ்க்கை இன்பத்தை அனுபவிக்காமல் தனியே இருந்து முதுமை அடைகிறாள். அழகு பயனில்லாமல், போய்விடுகிறது.
அதுபோல, ஒருவனிடம் நிறைய செல்வம் இருக்கிறது. அதை அவனும் அனுபவிப்பது இல்லை. பிறருக்கும் கொடுக்க மாட்டான்.
செல்வம் பயன்பட வேண்டுமானால், இல்லை என்று சொல்லாமல் ஏழை, எளியவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், பல பொது நன்மைகளுக்கும் உதவி செய்யலாம்.
இல்லையானால், அந்த செல்வம் பயன்படாமல், அழகான பெண் வாழ்க்கையை அனுபவிக்காமல் கிளவி ஆகிவிடுவதை போன்றது.