Absence of Envy

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.   (௱௬௰௭ - 167) 

Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval
Thavvaiyaik Kaatti Vitum
— (Transliteration)


avvittu aḻukkāṟu uṭaiyāṉaic ceyyavaḷ
tavvaiyaik kāṭṭi viṭum.
— (Transliteration)


The goddess of fortune departs the envious, Introducing him to her elder sister.

Tamil (தமிழ்)
பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாள் (௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள். (௱௬௰௭)
— மு. வரதராசன்


பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள். (௱௬௰௭)
— சாலமன் பாப்பையா


செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள் (௱௬௰௭)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀯𑁆𑀯𑀺𑀢𑁆𑀢𑀼 𑀅𑀵𑀼𑀓𑁆𑀓𑀸𑀶𑀼 𑀉𑀝𑁃𑀬𑀸𑀷𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀯𑀴𑁆
𑀢𑀯𑁆𑀯𑁃𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁤𑁠𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
जलनेवाले से स्वयं, जल कर रमा अदीन ।
अपनी ज्येष्ठा के उसे , करती वही अधीन ॥ (१६७)


Telugu (తెలుగు)
కూడు గుడ్డ లేక పాడౌను దనుదానె
యెరుల కీయ జాచి యోర్వకున్న (౧౬౭)


Malayalam (മലയാളം)
അസൂയക്കാരനെക്കണ്ടാൽ ലക്ഷ്മീദേവിക്കസൂയയാം അവനെക്കൈമാറും നേരം ദാരിദ്ര്യദേവിയേറ്റിടും (൱൬൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ಅಸೂಯೆ ಉಳ್ಳವನನ್ನು ಲಕ್ಷ್ಮಿ ಸಹಿಸದೆ ಅವನನ್ನು ತನಕ್ಕ ದರಿದ್ರ ಲಕ್ಷ್ಮಿಗೆ ತೋರಿಸಿ ಬಿಡುವಳು. (೧೬೭)

Sanskrit (संस्कृतम्)
दृष्ट्‌वा नरमसूयाढ्‌यं मन्युना सहिता रमा ।
ददाति तस्य दारिद्र्यम् स्वयं चापि विमुञ्चति ॥ (१६७)


Sinhala (සිංහල)
කෙරේ ඉසිකරනුන් - අසතූටුව ඉසි කළ සිරි මූදේවි සොයුරිය - ගෙනත් පෙන්වා ඉවත්වී යයි (𑇳𑇯𑇧)

Chinese (汉语)
幸運不降臨於貪嫉者, 但災禍將降臨之. (一百六十七)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Lakshmi tiada akan bersabar dengan mereka yang dengki: dia akan lari dari sisi mereka dan di-tinggalkan-nya kapada kakak-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
재산, 부의 여신은 질투를 버리고 불행의 여신을 질투에게 소개한다. (百六十七)

Russian (Русский)
Богиня богатства Лакшми не жалует завистников и отдает их под покровительство своей старшей сестры *

Arabic (العَرَبِيَّة)
إلهة الشروة (لكشمى) لا تصاحب الحاسد فانها تتركه وتهجر بيته لكي تدخل فيه اخته الكبرى (وهي البلية) (١٦٧)


French (Français)
La déesse (de la Fortune) envie les envieux, les indique à sa sœur aînée (déesse de la Misère) et se sépare d’eux.

German (Deutsch)
Wer ändere um ihr Glück beneiden, den übergibt die Göttin des Glücks ihrer älteren Schwester.

Swedish (Svenska)
Lakshmi vänder den avundsjuke ryggen och presenterar honom i stället för sin äldre syster.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Den felicitatis invido invidens sororem suam majorem introducit atque abibit. (CLXVII)

Polish (Polski)
Rzuci Pani Fortuna takiego w ramiona Swojej siostry najstarszej – Rozpaczy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தங்கையும் அக்காளும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒருவருடைய செல்வச் செழிப்பை, கிடைத்திருக்கும் பெரிய உத்தியோகத்தை, சேவை செய்ததால் அடைந்த புகழை (இவற்றில் ஏதாவது ஒன்றை)க் கண்டு பொறாமைப் படுபவன் என்ன கதியை அடைவான்?

அந்தப் பொறாமைகாரனிடம் வெறுப்புக்கொண்ட சீதேவியானவள், தன் அக்காளாகிய மூதேவியிடம், அவனைச் சுட்டிக்காட்டி விட்டு அவள் போய்விடுவாள்.

அவனிடம் செல்வம் இருந்தாலும் பிறகு அது அழிந்து போய், அவனுக்கு வறுமை வந்துவிடும்.

(செல்வத்தைச் (தங்கை) சீதேவி என்றும் வறுமையை (அக்காள்) மூதேவி என்றும் மக்கள் சொல்வார்கள்.)


அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22