ஊடலுவகை

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.   (௲௩௱௨௰௨ - 1322) 

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும், பின்னர்ப் பெருமை பெறும்  (௲௩௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.  (௲௩௱௨௰௨)
— மு. வரதராசன்


ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.  (௲௩௱௨௰௨)
— சாலமன் பாப்பையா


காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்  (௲௩௱௨௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀝𑀮𑀺𑀷𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀘𑀺𑀶𑀼𑀢𑀼𑀷𑀺 𑀦𑀮𑁆𑀮𑀴𑀺
𑀯𑀸𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼 𑀧𑁂𑁆𑀶𑀼𑀫𑁆 (𑁥𑁔𑁤𑁜𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ootalin Thondrum Sirudhuni Nallali
Vaatinum Paatu Perum
— (Transliteration)


ūṭaliṉ tōṉṟum ciṟutuṉi nallaḷi
vāṭiṉum pāṭu peṟum.
— (Transliteration)


The pinpricks of sulking do not discourage But strengthen love.

ஹிந்தி (हिन्दी)
मान जनित लघु दुःख से, यद्यपि प्रिय का प्रेम ।
मुरझा जाता है ज़रा, फिर भी पाता क्षेम ॥ (१३२२)


தெலுங்கு (తెలుగు)
ప్రణయ కలహమందు వలపు వాడినగాని
హానికన్న మేలె యధికమగును. (౧౩౨౨)


மலையாளம் (മലയാളം)
പിണക്കത്താലവർ ചെയ്യും നന്മ ചെറുതായ് തോന്നിടും പിണക്കം നൽകിടും ദുഃഖമെന്നാലും സുഖമുള്ളതാം (൲൩൱൨൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪ್ರಣಯದ ಹುಸಿ ಮುನಿಸಿನಿಂದ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳುವ ಕಿರು ದುಃಖದಿಂದಾಗಿ, ಪ್ರಿಯತಮನ ನಿರ್ಮಲ ಪ್ರೀತಿಯು ಬಾಡಿದರೂ ಅಂತ್ಯದಲ್ಲಿ ಅದು ಹಿರಿಮೆಯನ್ನು ಪಡೆಯುವುದು. (೧೩೨೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
विप्रलम्भेन सञ्जातमत्यल्पं व्ससनं भुवि ।
नायकप्रेमविच्छेदकारकं चापि सम्मतम् ॥ (१३२२)


சிங்களம் (සිංහල)
නො කැමති බවෙහි දී - දිසිවන තරහ සුළු දොස රස පහස නුදුනත් - පසුව වැඩි වැඩි රසය ගෙන දේ (𑇴𑇣𑇳𑇫𑇢)

சீனம் (汉语)
爭論憤恚, 雖苦惱於一時, 終歸和樂. (一千三百二十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Walau pun pura2 merajok melahirkan kepedehan sa-ketika dan chinta lenyap semcntara dengan-nya, tetapi di-dalam-nya ada keindahan pula.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
시무룩함은단지약간의괴로움만유발하지만항상사랑을강화시킨다. (千三百二十二)

உருசிய (Русский)
Из-за моей мнимой обиды у него появляется небольшая боль, но даже если его любовь уменьшилась на миг, то скоро снова расцветет

அரபு (العَرَبِيَّة)
مع أن رقة قلب الحبيب تجعله أن ينتظر قليلا ولكن هناك بهجة فى المشاجرة التى تسبب الازعاج الغضب بين المحبين (١٣٢٢)


பிரெஞ்சு (Français)
Par le petit chagrin qua lui cause ma bouderie, la tendresse de mon amant retarde bien un peu, mais elle n'a ensuite que plus de charme.

ஜெர்மன் (Deutsch)
Seine Liebe nimmt zu, auch wenn sie ein wenig zu schwinden scheint wegen der Pein meines Schmollens.

சுவீடிய (Svenska)
Även om hans ömhet syns svalna något när han retas av mitt låtsasmotstånd blir dock resultatet en desto större njutning.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Socia dominae: cum inquit, etiam non recusans am ore illius perfruaris , quamobrem recusatione ilia te ipsum crucias '? Domina responder: Ex recusando dolor proficiscitur quam mini mus, et (tameu ita)-illius amor, etiamsi marcescat, incrementum capit. (MCCCXXII)

போலிய (Polski)
Wybuchają i gasną bez żadnej przyczyny, Potem kończą się w mig pojednaniem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22