நெஞ்சோடு புலத்தல்

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.   (௲௨௱௯௰௮ - 1298) 

‘பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும்’ என்று நினைத்து, அவர் மேல் உயிர் போலக் காதல் கொண்ட என் நெஞ்சம், அவரது உயர் பண்புகளையே நினைக்கிறதே!  (௲௨௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.  (௲௨௱௯௰௮)
— மு. வரதராசன்


உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.  (௲௨௱௯௰௮)
— சாலமன் பாப்பையா


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்  (௲௨௱௯௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀴𑁆𑀴𑀺𑀷𑁆 𑀇𑀴𑀺𑀯𑀸𑀫𑁆𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 𑀏𑁆𑀡𑁆𑀡𑀺 𑀅𑀯𑀭𑁆𑀢𑀺𑀶𑀫𑁆
𑀉𑀴𑁆𑀴𑀼𑀫𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀸𑀢𑀮𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼 (𑁥𑁓𑁤𑁣𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ellin Ilivaamendru Enni Avardhiram
Ullum Uyirkkaadhal Nenju
— (Transliteration)


eḷḷiṉ iḷivāmeṉṟu eṇṇi avartiṟam
uḷḷum uyirkkātal neñcu.
— (Transliteration)


My dear loving heart decrees, my lord is not to be shamed And thus hails only his glory.

ஹிந்தி (हिन्दी)
नाथ-उपेक्षा निंद्य है, यों करके सुविचार ।
करता उनका गुण-स्मरण, यह दिल जीवन-प्यार ॥ (१२९८)


தெலுங்கு (తెలుగు)
జీవతాశ నతని చెడుగుల వర్ణింప
తనకె లోపమంచు దలచి దలచి. (౧౨౯౮)


மலையாளம் (മലയാളം)
അകന്നനാഥനെത്താഴ്ത്തിചൊല്ലുന്നതപമാനമാം എന്നുനണ്ണിപ്പുകഴ്ത്തുന്നു ജീവിതത്വരയാൽ മനം (൲൨൱൯൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಜೀವದ ಮೇಲೆ ಪ್ರೀತಿಯಿಟ್ಟ ನನ್ನ ಹೃದಯವು, ಅಗಲಿದ ಇನಿಯನನ್ನು ನಿಂದಿಸಿದರೆ ಪರಿಹಾರವಾಗುವುದೆಂದು ಬಗೆದು, ಅವನ ಉನ್ನತ ಗುಣಗಳನ್ನೇ ನೆನೆಯುತ್ತಿರುವುದು. (೧೨೯೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अप्रीतनायकोपेक्षा न युक्तेति विचिन्त्य तु ।
जीवनाशायुतं चित्तं सदा ध्यायति तद्‍गुणान् (१२९८)


சிங்களம் (සිංහල)
නින්දා අපහාස - නීවැ යි සිතා ඔහු ගුණ සමරයි හිත ඇතිව - කැමති සිත මා පණට පමණක් (𑇴𑇢𑇳𑇲𑇨)

சீனம் (汉语)
妾心以責郎爲不當, 常偏向之. (一千二百九十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Hati-ku yang menchintai jiwa-nya mengirakan sunggoh aib-lah kita kalau menghinakan kekaseh: kerana itu maka selalu sahaja ia menye- belahi-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
사랑하는마음은애인을수치스럽다고경멸하면서도, 항상그와그의훌륭함을생각한다. (千二百九十八)

உருசிய (Русский)
Мое живое сердце только и мечтает о добрых качествах моего милого, считая, что обида будет позором для нас самих

அரபு (العَرَبِيَّة)
قلبى يحتسب إذ لا ل الحبيب كاذلال نفسى فاذن هو لا يزال فى فائدة (١٢٩٨)


பிரெஞ்சு (Français)
Mon cœur avide de vivre, croyant que c'est un déshonneur de mépriser celui qui noua a méprisés, pense toujours à sa constance.

ஜெர்மன் (Deutsch)
Mein Herz, das sein Herz liebt, denkt nur an seine guten Eigenschaften und daran, wie schädlich es ist, ihn zu verachten.

சுவீடிய (Svenska)
Att förakta honom för hans felsteg vore förnedrande, och därför tänker mitt livsbejakande hjärta blott på hans förtjänster.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si illi exprobrabo, probrum milii erit; id cogitans animus meus virtutem ejus meditatur. (MCCXCVIII)

போலிய (Polski)
Nie chcę jednak potępiać mężowskich poczynań, Które zawsze szacunkiem darzono.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22