புணர்ச்சி விதும்பல்

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.   (௲௨௱௮௰௮ - 1288) 

கள்வனே! இழிவு வரத்தகுந்த துன்பங்களையே செய்தாலும், கள்ளுண்டு களித்தவருக்கு மென்மேலும் ஆசையூட்டும் கள்ளைப் போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே!  (௲௨௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.  (௲௨௱௮௰௮)
— மு. வரதராசன்


வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.  (௲௨௱௮௰௮)
— சாலமன் பாப்பையா


என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு  (௲௨௱௮௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀴𑀺𑀢𑁆𑀢𑀓𑁆𑀓 𑀇𑀷𑁆𑀷𑀸 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀓𑁆
𑀓𑀴𑁆𑀴𑀶𑁆𑀶𑁂 𑀓𑀴𑁆𑀯𑀦𑀺𑀷𑁆 𑀫𑀸𑀭𑁆𑀧𑀼 (𑁥𑁓𑁤𑁢𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Iliththakka Innaa Seyinum Kaliththaarkkuk
Kallatre Kalvanin Maarpu
— (Transliteration)


iḷittakka iṉṉā ceyiṉum kaḷittārkkuk
kaḷḷaṟṟē kaḷvaniṉ mārpu.
— (Transliteration)


The drunkard seeks wine knowing well its shame; So does your bosom to me, O thief!

ஹிந்தி (हिन्दी)
निन्दाप्रद दुख क्यों न दे, मद्यप को ज्यों पान ।
त्यों है, वंचक रे, हमें, तेरी छाती जान ॥ (१२८८)


தெலுங்கு (తెలుగు)
మాన నౌనె కల్లు మర్యాద గాదని
విడువనగునె ప్రియుని విటుడటంచు. (౧౨౮౮)


மலையாளம் (മലയാളം)
മാന്യതക്കിഴിവായാലും മദ്യപിച്ചു രസിച്ചവൻ ആർത്തികാട്ടുന്ന മദ്യം പോൽ ആശയേറ്റുന്നു മാറിടം (൲൨൱൮൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಓ ಕಳ್ಳನೇ! ಅವಮಾನಕರವಾದ ದುಃಖಗಳನ್ನು ತಂದೊಡ್ಡಿದರೂ ಅವು ಲೇರಿದವರಿಗೆ ಕಳ್ಳು ಹೇಗೆ ಪ್ರಿಯವೋ ಹಾಗೆ ನಿನ್ನ ಎದೆಯು ನನಗೆ! (೧೨೮೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सुरापानाद् भवेद्धानिरिति ज्ञात्वापि मानव: ।
हर्षात् पिबेद्यथा तद्वत् तव वक्ष: पुनर्वृणे ॥ (१२८८)


சிங்களம் (සිංහල)
රහ මෙරෙන් මත් වූ - කෙනෙකුට සුරාවක් මෙනි කළත් අමිහිරි දෑ - පපුව සැප සුව ගෙනෙයි ඔබගේ (𑇴𑇢𑇳𑇱𑇨)

சீனம் (汉语)
醉徒縱使受害蒙羞, 亦不拒其酒; 妾雖受郎欺騙, 亦不拒郎也. (一千二百八十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Anggor tidak akan di-tolak oleh si-pemabok walau pun akan ter- tundok ia kerana malu: bagitu-lah juga dada-mu kapada-ku, wahai Penipu!
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
비록술고래에게치욕을가져오지만, 술은술고래에게사랑받는다. 그러니까애인의가슴은그의사랑을위한것이다. (千二百八十八)

உருசிய (Русский)
О, моя чудная любимая! Твоя грудь мне такая же радость, как вино для пьяницы, которое дарит ему страдания и бесчестье

அரபு (العَرَبِيَّة)
كما أن السكران لا ينكر من شرب الخمر وهو يعلم أنه يسبب له الندامة فكذلك لا أنكر من أظهار الرغبة للأتصال بالجيب مع أنه خادع فى حبه لى (١٢٨٨)


பிரெஞ்சு (Français)
Voleur! Ta poitrine ressemble au vin qui est désiré par celui qui prend plaisir à le boire, bien qu'il ne lui cause rien qui ne le conduise à la honte!

ஜெர்மன் (Deutsch)
Trickreicher, deine Brust ist wie Alkohol denen, die sich seiner erfreuen, obwohl er nur schändliche Dinge einbringt.

சுவீடிய (Svenska)
Ack, du bedragare, din famn är som berusande vin, vilket blott ger skam och vanära åt dem som njuter därav!
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Socia desiderium dorninae iterum se coujungend.i coguitum habeus, domino <licit: Quod mulsum est bibentibns, etiamsi dolore, qui ignominiam inurit, afficiat, idem, perfide, est pectus tuum. (MCCLXXXVIII)

போலிய (Polski)
Lecz jest nazbyt spragniona pozorów niewiasta, Ukojenia w nich szuka jak w winie
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22