புணர்ச்சி விதும்பல்

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.   (௲௨௱௮௰௫ - 1285) 

மை எழுதும் போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப் போல, என் காதலனைக் கண்டபோது, அவன் குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே!  (௲௨௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.  (௲௨௱௮௰௫)
— மு. வரதராசன்


முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.  (௲௨௱௮௰௫)
— சாலமன் பாப்பையா


கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்  (௲௨௱௮௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀵𑀼𑀢𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆 𑀓𑁄𑀮𑁆𑀓𑀸𑀡𑀸𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑁂𑀧𑁄𑀮𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀓𑀷𑁆
𑀧𑀵𑀺𑀓𑀸𑀡𑁂𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝 𑀇𑀝𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁢𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan
Pazhikaanen Kanta Itaththu
— (Transliteration)


eḻutuṅkāl kōlkāṇāk kaṇṇēpōl koṇkaṉ
paḻikāṇēṉ kaṇṭa iṭattu.
— (Transliteration)


Like eyes that can’t see the painting brush, I don’t see his faults when I see him.

ஹிந்தி (हिन्दी)
कूँची को नहिं देखते, यथा आंजते अक्ष ।
उनकी भूल न देखती, जब हैं नाथ समक्ष ॥ (१२८५)


தெலுங்கு (తెలుగు)
లేఖ ప్రాయునపుడు లేఖిని గననట్లు
కాంతుజూడ దప్పు గాంచనైతి. (౧౨౮౫)


மலையாளம் (മലയാളം)
കണ്ണിൽ മയ്യെഴുതും നേരം മൈക്കോൽ കാണ്മീല കണ്ണുകൾ നാഥനെക്കാൺകവേ പൂർവ്വ കുറ്റമെല്ലാം മറന്നു ഞാൻ (൲൨൱൮൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕಾಡಿಗೆ ಬಳಿಯುವಾಗ, ಕಾಡಿಗೆ ಕಡ್ಡಿಯನ್ನು ಕಾಣಲಾರದ ಕಣ್ಣುಗಳಂತೆ, ಪ್ರಿಯತಮನನ್ನು ಕಂಡಾದ ಮಾತ್ರ, ಅವನ ದೋಷಗಳನ್ನೆಲ್ಲ ನೆನೆದುಕೊಳ್ಳದೆ ಮರೆತು ಬಿಡುವೆನು. (೧೨೮೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रिये दृष्टिं गते दोषान् तदीयान् विस्मराम्यहम् ।
अञ्जनालङ्कृतं नेत्रं शलाकां विस्मरेद्यथा ॥ (१२८५)


சிங்களம் (සිංහල)
බැම මත ලතු උලන - පින්සල නුදුටු නෙත මෙන් සැමියා දුටු අතර - වුනා අමතක නිගා නින්දා (𑇴𑇢𑇳𑇱𑇥)

சீனம் (汉语)
書寫之時, 不能見筆尖之墨; 見郎之時, 不能見其過. (一千二百八十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Saperti mata yang tidak nampak akan hitam-nya penchelak bila ia di- hiasi, bagitu-lah tidak ku-nampak kechachatan kekaseh-ku bila dia berada di-sisi.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
눈을채색하는화장붓을그눈이볼수없는것처럼,애인을만나는동안그의결점을볼수없다. (千二百八十五)

உருசிய (Русский)
Как глаз не видит кисточку, когда я наношу на ресницы сурьму*,,ак же, глядя с любовью на милого я прощаю ему все обиды

அரபு (العَرَبِيَّة)
كما أن عيني لا تريان سوادا القلم المطلي باللون فكذلك لا أرى نقائص الحبيبي مع أنه قريب مني (١٢٨٥)


பிரெஞ்சு (Français)
De même qu'en écrivant, l'œil ne voit pas la nature de la plume, je ne vois pas la faute de mon mari, dès que je l'aperçois.

ஜெர்மன் (Deutsch)
Wie man den Griffel beim Schreiben nicht sieht, sehe ich die Fehler nicht, wenn ich meinen Mann sehe.

சுவீடிய (Svenska)
När man målar sina ögon ser de icke penseln. När jag möter min älskade ser jag ej hans fel.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Oculo similis, qui se pingentem penicillum non videt, ego vitium conjugis non video, ipsum videns. (MCCLXXXV)

போலிய (Polski)
Nie spostrzegam wad szminki, gdy oczy maluję; Męża wad - gdy korzystam z praw żony.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22