நெஞ்சோடு கிளத்தல்

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.   (௲௨௱௪௰௬ - 1246) 

என் நெஞ்சமே! ஊடிய போது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய்; பொய்யான சினம் கொண்டு தான் காய்கின்றாய்!  (௲௨௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.  (௲௨௱௪௰௬)
— மு. வரதராசன்


என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.  (௲௨௱௪௰௬)
— சாலமன் பாப்பையா


நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?  (௲௨௱௪௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀮𑀦𑁆𑀢𑀼𑀡𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀓𑀸𑀢𑀮𑀭𑁆𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀶𑁆 𑀧𑀼𑀮𑀦𑁆𑀢𑀼𑀡𑀭𑀸𑀬𑁆
𑀧𑁄𑁆𑀬𑁆𑀓𑁆𑀓𑀸𑀬𑁆𑀯𑀼 𑀓𑀸𑀬𑁆𑀢𑀺𑀏𑁆𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼 (𑁥𑁓𑁤𑁞𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kalandhunarththum Kaadhalark Kantaar Pulandhunaraai
Poikkaaivu Kaaidhien Nenju
— (Transliteration)


kalantuṇarttum kātalark kaṇṭāṟ pulantuṇarāy
poykkāyvu kāyti'eṉ neñcu.
— (Transliteration)


My heart that pretends to be angry will at once Yield and jell seeing my lover.

ஹிந்தி (हिन्दी)
जब प्रिय देते मिलन सुख, गया नहीं तू रूठ ।
दिल, तू जो अब क्रुद्ध है, वह है केवल झूठ ॥ (१२४६)


தெலுங்கு (తెలుగు)
బింకమేల మనస ప్రియుని జూచినతోడ
విరహకోపమెల్ల పరుగుదీయు. (౧౨౪౬)


மலையாளம் (മലയാളം)
മുഷിപ്പുതീർന്നു ചേരാനായ് നാഥൻ നമ്മോടടുക്കവേ എന്തെ, നെഞ്ചമിണങ്ങീലാ? കള്ളക്കോപമൊഴിക്ക നീ (൲൨൱൪൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಓ ಮನಸ್ಸೆ! ಹಿಂದೆ ನೀನು ಕಾಮಾತುರತೆಯಿಂದ ಕೂಡಿ ರಮಿಸಲು ಬಂದ ಇನಿಯನನ್ನು ಕಂಡಾಗಲೆಲ್ಲ ಹುಸಿ ಮುನಿಸಿನಿಂದ ದೂರ ಸರಿಯುತ್ತದ್ದೆ! ಈಗ ಆಗಲಿಕೆಯಲ್ಲೂ ಅದೇ ಹುಸಿ ಮುನಿಸನ್ನು ಪ್ರಕಟಿಸುತ್ತಿರುವೆಯಲ್ಲ! (೧೨೪೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
त्वत्प्रियस्त्वां वियुज्याथ मिलेद्यदि तदा पुन: ।
रतिं न कुरुषे धैर्यात् पश्चात्कुप्यसि हे मन: ! ॥ (१२४६)


சிங்களம் (සිංහල)
අදුනත රසවතා - නො කැමතී නොවේ නම් දැක එම්බා සිතේ ෟඔබ - ඇයිද? බොරුවට කිපෙනු සේ මේ (𑇴𑇢𑇳𑇭𑇦)

சீனம் (汉语)
心乎! 良人善於修好, 使妾一見而入其懷, 此日之憤怒, 當非眞也. (一千二百四十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apabila kau memandang kapada kekaseh yang pandai memujok hati, O Hati-ku, kau tidak pun sadikit menyinggong-nya, malah kau lari ka-pelokan-nya dan melupakan segala2: aku khuatir di-waktu ini pun kemarahan-mu pura2 sahaja.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
애인과만나서굴복할때그녀는분노를유지할수없다. (千二百四十六)

உருசிய (Русский)
Ты видишь, о, сердце любимого, умеющего унять мои обиды своими объятиями,, не сердишься на него. Тогда к чему твоя притворная досада на него?

அரபு (العَرَبِيَّة)
إذا ما تلقى النظرة أيها القلب ! على الحبيب الذى هو شاطر فى كسب المصالحة معك لا تستطيع أن تغضب عليه بل ستتقدم إليه لكي يعنقك وتنسى كل شيئ وأخاف أن تكظم الغيظ أيضا (١٢٤٦)


பிரெஞ்சு (Français)
O mon cœur 1 ( (si je me fâche ) il a le pouvoir de faire disparaître ma colère, en s'unissant à moi. Si tu le vois, tu no peux même pas feindre d'abord la colère, pour te réconcilier ensuite avec lui. C'est donc à faux que tu lui reproches sa cruauté.

ஜெர்மன் (Deutsch)
Siehst du den Geliebten, der die Freude aus seiner Umarmung nimmt - zeige keinen Zorn, dein Kummer ist falsch, mein Herz!

சுவீடிய (Svenska)
Om du, mitt hjärta, möter min älskade som söker försoning i min famn, så kan du ej konsten att vara ond. Din vrede är bara låtsad.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Animo, qui de duritate illius cogitans ire nolit, subirata <licit: Animc ! si amatum , amplectendo ad concordiam redeuntem, vides, subirasci nescies. Iram irritam irasceris, anime mi! (MCCXLVI)

போலிய (Polski)
Lecz wystarczy, by zjawił się nagle przede mną, Abym jemu ten dług darowała.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22