நெஞ்சோடு கிளத்தல்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.   (௲௨௱௪௰௫ - 1245) 

நெஞ்சமே! நாம் விரும்பி நாடினாலும், நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவரைக் கைவிட நம்மால் முடியுமோ?  (௲௨௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?  (௲௨௱௪௰௫)
— மு. வரதராசன்


நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?  (௲௨௱௪௰௫)
— சாலமன் பாப்பையா


நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?  (௲௨௱௪௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀏𑁆𑀷𑀓𑁆𑀓𑁃 𑀯𑀺𑀝𑀮𑁆𑀉𑀡𑁆𑀝𑁄 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑁂𑀬𑀸𑀫𑁆
𑀉𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀉𑀶𑀸𑀅 𑀢𑀯𑀭𑁆 (𑁥𑁓𑁤𑁞𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Setraar Enakkai Vitalunto Nenjeyaam
Utraal Uraaa Thavar
— (Transliteration)


ceṟṟār eṉakkai viṭaluṇṭō neñcēyām
uṟṟāl uṟā'a tavar.
— (Transliteration)


O heart, can I call him a foe and dump him Who longs not for me though I long for him?

ஹிந்தி (हिन्दी)
यद्यपि हम अनुरक्त हैं, वे हैं नहिं अनुरक्त ।
रे दिल, यों निर्मम समझ, हो सकते क्या त्यक्त ॥ (१२४५)


தெலுங்கு (తెలుగు)
ప్రేమజూపి వెనుక విడచినాడని తాను
విడువనగునె నేను వెఱ్ఱి మనస. (౧౨౪౫)


மலையாளம் (മലയാളം)
മനമേ! നാം പ്രിയപ്പെട്ടോർ നമ്മെച്ചിന്തിച്ചിടായ്കിലും അവർ വെറുത്തെന്നൂഹിച്ചു കൈവിടാൻ കഴിവില്ലയേ (൲൨൱൪൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಓ ಮನಸ್ಸೇ! ನಾವು ಪ್ರೀತಿ ತೋರಿದರೂ, ನಮ್ಮನ್ನು ಪ್ರೀತಿಸದ ಅವರು ನಿರ್ದಯರೆಂದು ಅವರನ್ನು ಕೈಬಿಡಲು ಸಾಧ್ಯವೆ? (೧೨೪೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कामुको वाञ्छितोऽस्माभि:, अस्मान्नासौ वृणेतु वा ।
हे चित्त ! कथमस्माभिरयं त्यक्तुं हि शक्यते ॥ (१२४५)


சிங்களம் (සිංහල)
එක් වී පළමු කොට - දැන් එක් නොවන ඇත්තා පෙම්වත් නො වේයැයි - සිතේ ෟ අත්හැර දැමිය හැකි වෙද ? (𑇴𑇢𑇳𑇭𑇥)

சீனம் (汉语)
心乎! 良人雖忍心棄吾辈於不顧, 吾辈將視之若簪乎? (一千二百四十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Walau pun kita menchintai-nya, O Hati-ku, dia menolak kita dengan menghinakan serta, mungkin-kah kita menolak-nya sa-bagai inusoh pula?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
비록그가사랑을보여주지않았지만그녀는무정한애인을포기할수없다. (千二百四十五)

உருசிய (Русский)
Пусть он и не любит нас, мое сердце,,о можем ли мы отвернуться от него?

அரபு (العَرَبِيَّة)
مع أنه يزدرى ويحتقرنا بالرغم من إستياقنا باالتصال به هل يمنكن لك أيها القلب أن تبتعده كعدو (١٢٤٥)


பிரெஞ்சு (Français)
O mon cœur ! Nous le désirons, lui est indifférent. Y a-t-il pour nous un moyen de l'abandonner, parce qu'il nous a dédaignés?

ஜெர்மன் (Deutsch)
Kann ich ihn aufgeben, weil er mich haßt, mein Herz - ihn, der nicht liebt, obwohl er geliebt wird?

சுவீடிய (Svenska)
Kan du, mitt hjärta, förskjuta honom som ej besvarar vår kärlek och i honom se en fiende?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Anime mi! num cum tamquam hostem possum dimittere, qui, quamvis ego illi propria sim, mihi non sit proprius, (MCCXLV)

போலிய (Polski)
Krzywdziciela zapomnieć próbujesz daremno, Choć on pierwszy poskąpił nam ciała!
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22