கனவுநிலை உரைத்தல்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.   (௲௨௱௨௰ - 1220) 

‘நனவிலே நம்மைவிட்டுப் பிரிந்து போனார்’ என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல் கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ?  (௲௨௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?  (௲௨௱௨௰)
— மு. வரதராசன்


என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?  (௲௨௱௨௰)
— சாலமன் பாப்பையா


என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?  (௲௨௱௨௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀷𑀯𑀺𑀷𑀸𑀮𑁆 𑀦𑀫𑁆𑀦𑀻𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀭𑁆 𑀓𑀷𑀯𑀺𑀷𑀸𑀮𑁆
𑀓𑀸𑀡𑀸𑀭𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀇𑀯𑁆𑀯𑀽 𑀭𑀯𑀭𑁆 (𑁥𑁓𑁤𑁜)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal
Kaanaarkol Ivvoo Ravar
— (Transliteration)


naṉaviṉāl namnīttār eṉpar kaṉaviṉāl
kāṇārkol ivvū ravar.
— (Transliteration)


He is a deserter, people say. But how can they see his visits in my dreams?

ஹிந்தி (हिन्दी)
यों कहते प्रिय का मुझे, जाग्रति में नहिं योग ।
सपने में ना देखते, क्या इस पुर के लोग ॥ (१२२०)


தெலுங்கு (తెలుగు)
వాడుకొంద్రు ప్రియుడు వదలినాడని యూర
కలను వచ్చుటెల్ల కానలేరు. (౧౨౨౦)


மலையாளம் (മലയാളം)
കാമുകൻ വിട്ടുപോയെന്നായ് ചൊല്ലുന്നൂരിൽ ജനങ്ങളും; കനവിൽ വന്നുപോകുന്നതാരാലുമറിയപ്പെടാ (൲൨൱൨൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನನಸಿನಲ್ಲಿ ನನ್ನನ್ನು ಅವರು ತೊರೆದು ಹೋದರೆಂದು ಈ ಊರವರು ನಿಂದಿಸಿ ಮಾತಾಡುವರಲ್ಲ! ನನ್ನ ಕನಸಿನಲ್ಲಿ ಅವರು ಬಂದು ಹೋಗುವುದನ್ನು ಕಾಣಲಾರರೆ? (೧೨೨೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
त्याक्तवाऽस्मान् नायक: प्रायादि' ति निन्दन्ति या: स्त्रिय: ।
अविर्भवन्तं स्वप्ने तं न निन्दन्ति हि ता: किमु ॥ (१२२०)


சிங்களம் (සිංහල)
සිහිනෙන් පැමිණියහු - දුටුවේ නැද්ද ගම්මු සැබවින්ම මේ මා - අතැර දැමුණේ ය යි කියන්නේ (𑇴𑇢𑇳𑇫)

சீனம் (汉语)
鄰里皆謂頁人實已棄妾於不顧, 焉知其夢中來相訪哉. (一千二百二十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Orang kampong ini berkata yang ia sudah pergi dari sisi-ku: ada-kah ini kerana tidak di-lihat-nya dia di-dalam mimpi?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
마을사람들은 그가 그녀의꿈에 들어오는것을보지못하기때문에,그녀가깨어있을때헤어진애인을비난한다. (千二百二十)

உருசிய (Русский)
Люди говорят, что мой желанный бросил меня на виду всех. Но едва ли они могут видеть его во сне

அரபு (العَرَبِيَّة)
هولاء الأوساط من القرية يقولون بأن حبيبى قد فارق عنى – أذلك بسبب أنهم لا يرونه فى احلامى (١٢٢٠)


பிரெஞ்சு (Français)
Les femmes de cette ville reprochent à mon amant de m'avoir abandonnée: Ne savent elles donc pas qu'il vient me voir en songe?

ஜெர்மன் (Deutsch)
Die Leute des Ortes, die sagen, daß er mich im Wachen verlassen habe, sehen ihn nicht in meine Träume kommen.

சுவீடிய (Svenska)
I vaket tillstånd säger de att han har övergett mig. Ty folket här i byn har ju icke såsom jag fått se honom i drömmen.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Ilium vigilantem me dcscruisse dicunt; certe dormientes eum non vidcnt oppidani. (MCCXX)

போலிய (Polski)
Ludzie mówią: «Ten człowiek snadź gdzieś się zagubił » A nie wiedzą, jak często tu bawisz.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22