கனவுநிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.   (௲௨௱௰௧ - 1211) 

பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர் அனுப்பிய தூதோடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்!  (௲௨௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?  (௲௨௱௰௧)
— மு. வரதராசன்


என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?  (௲௨௱௰௧)
— சாலமன் பாப்பையா


வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?  (௲௨௱௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀢𑀮𑀭𑁆 𑀢𑀽𑀢𑁄𑁆𑀝𑀼 𑀯𑀦𑁆𑀢 𑀓𑀷𑀯𑀺𑀷𑀼𑀓𑁆𑀓𑀼
𑀬𑀸𑀢𑀼𑀘𑁂𑁆𑀬𑁆 𑀯𑁂𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀯𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁛𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku
Yaadhusey Venkol Virundhu
— (Transliteration)


kātalar tūtoṭu vanta kaṉaviṉukku
yātucey vēṉkol viruntu.
— (Transliteration)


How shall I feast this dream which brought A message from my lord?

ஹிந்தி (हिन्दी)
प्रियतम का जो दूत बन, आया स्वप्नाकार ।
उसका मैं कैसे करूँ, युग्य अतिथि-सत्कार ॥ (१२११)


தெலுங்கு (తెలుగు)
దూతగాగ ప్రియుని తోడుక వచ్చిన
కలకు విందుజేతు కనులముందె. (౧౨౧౧)


மலையாளம் (മലയാളം)
താപശാന്തി വരുത്താനായ് കാമുകൻ തൻറെ ദൂതുമായ് വന്നണഞ്ഞൊരു സ്വപ്നത്തെയെങ്ങനെ സൽക്കരിച്ചു ഞാൻ? (൲൨൱൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
(ನಾನು ವಿರಹದಲ್ಲಿ ಸೊರಗಿ ಮಲಗಿರುವಾಗ) ಪ್ರಿಯತಮನ ಸಂದೇಶದೊಡನೆ ಬಂದ ಕನಸಿಗೆ ತಕ್ಕ ರೀತಿಯಲ್ಲಿ ಸನ್ಮಾನವನ್ನು ಹೇಗೆ ಮಾಡೂವುದೇನೋ! (೧೨೧೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रियान्देशसहित: स्वप्नो य: समुपागत: ।
निद्रायां तस्य चातिथ्यं कीदृशं करवाण्यहम् ॥ (१२११)


சிங்களம் (සිංහල)
පෙම්වතා සැපයුව - දූතිය සමග පැමිණි සිහිනයට කෙලෙසක - කවර සත්කාරයක් කරමි ද ? (𑇴𑇢𑇳𑇪𑇡)

சீனம் (汉语)
夢寐使妾與頁人歡晤, 妾將何以報之? (一千二百十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kehormatan apa-kah yang mesti ku-berikan kapada Mimpi yang membawa khabar dari kekaseh-ku?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
그녀는사랑하는애인의메시지로위로해준꿈을기리고싶다.  (千二百十一)

உருசிய (Русский)
С огромной радостью приму я в гостях сон,,оторый пошлет мне весточку от любимого

அரபு (العَرَبِيَّة)
كيف أبجّل وأعظم حلمى؟ الذى أتى بالخبار السارة عن حبيبي (١٢١١)


பிரெஞ்சு (Français)
Quel honneur ferai-je au songe, qui m'a apporté le message de mon amant?

ஜெர்மன் (Deutsch)
Wie soll ich den Traum feiern, der mit der Botschaft meines Geliebten kam?

சுவீடிய (Svenska)
Med vilken fest skall jag nu icke fira den dröm som har kommit med bud från min älskade!
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Domina, qnac vidit nuntium domini veuientem, dlicit: Somnio, quod nuntinm dilecti afforebat, q1ms dabo epulas ? (MCCXI)

போலிய (Polski)
Cieszę się, kiedy snem mnie obdarzą bogowie, Bo ułuda przywraca mi męża.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22