நினைந்தவர் புலம்பல்

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.   (௲௨௱௪ - 1204) 

எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே, அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமோ?  (௲௨௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?  (௲௨௱௪)
— மு. வரதராசன்


என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?  (௲௨௱௪)
— சாலமன் பாப்பையா


என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?  (௲௨௱௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀬𑀸𑀫𑀼𑀫𑁆 𑀉𑀴𑁂𑀗𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀅𑀯𑀭𑁆𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀼 𑀏𑁆𑀦𑁆𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀼
𑀑𑀑𑁆 𑀉𑀴𑀭𑁂 𑀅𑀯𑀭𑁆 (𑁥𑁓𑁤𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu
Oo Ulare Avar
— (Transliteration)


yāmum uḷēṅkol avarneñcattu enneñcattu
ō'o uḷarē avar.
— (Transliteration)


No doubt my lord abides in my heart. Do I also likewise abide in his?

ஹிந்தி (हिन्दी)
उनके दिल में क्या रहा, मेरा भी आवास ।
मेरे दिल में, ओह, है, उनका सदा निवास ॥ (१२०४)


தெலுங்கு (తెలుగు)
మేము వారి మదిని మెలగుదుమో లేమొ
మరువ మతని మాదు మానసముల. (౧౨౦౪)


மலையாளம் (മലയാളം)
പ്രേമനായകനെൻ നെഞ്ചിലെപ്പോഴും കുടിവാഴ്വതേ; അതുപോലവർ നെഞ്ചിൽ ഞാനുണ്ടോയെന്നറിയില്ലിയേ! (൲൨൱൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಹಾಯ್! ನನ್ನ ಹೃದಯದಲ್ಲಿ ನಾನೊಲಿದ ನಲ್ಲನು ನೆಲೆಸಿರುವಂತೆ, ಅವನ ಹೃದಯದಲ್ಲಿ ಕೂಡ ನಾನು ನೆಲಸಿರಬಹುದಲ್ಲವೆ? (೧೨೦೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
वासं करोति मच्चिते सर्वदा प्रियकामुक: ।
तथा तदीयचित्तेऽपि वसामि किमहं न वा? ॥ (१२०४)


சிங்களம் (සිංහල)
මගේ සිත නිතරම - නවාතැන වෙයි ඔහුටම එලෙසම ඔහු සිතෙහි - මට ත් ඉඩ සැලසුනා වත්දෝ (𑇴𑇢𑇳𑇤)

சீனம் (汉语)
頁人時在妾念中, 未知妾亦時在頁人念中否? (一千二百四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ada-kah aku bertempat di-kalbu-nya? Untok-nya pula, tiada sadikit pun di-ragukan, tempat-nya ada di-dalam hati-ku.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
그녀의마음속에그는항상거하지만그의마음속에그녀의자리가있는지의심스럽다. (千二百四)

உருசிய (Русский)
Он обитает в моем сердце каждый миг. Неужели и я живу в его сердце?

அரபு (العَرَبِيَّة)
هل لى فى قلبه مكان فى أية حالة؟ ولكنه دون شك يسكن فى قلبى (١٢٠٤)


பிரெஞ்சு (Français)
Il séjourne toujours dans mon cœur. Ai-je ou non une place dans le sien ?

ஜெர்மன் (Deutsch)
Er ist immer in meinen Gedanken - bin ich auch in den seinen?

சுவீடிய (Svenska)
Han finns ständigt i mitt hjärta. Har jag månne en plats i hans?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Egone sum iu illius animo? Ille iu meo animo est. (MCCIV)

போலிய (Polski)
On na przykład mą pamięć zupełnie omotał. Czy i ja ciągle trwam w jego myślach?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22