தனிப்படர் மிகுதி

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.   (௲௱௯௰௭ - 1197) 

இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டும் காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் காண மாட்டானோ?  (௲௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?  (௲௱௯௰௭)
— மு. வரதராசன்


ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?  (௲௱௯௰௭)
— சாலமன் பாப்பையா


காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!  (௲௱௯௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀭𑀼𑀯𑀭𑀮𑀼𑀫𑁆 𑀧𑁃𑀢𑀮𑀼𑀫𑁆 𑀓𑀸𑀡𑀸𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀓𑀸𑀫𑀷𑁆
𑀑𑁆𑀭𑀼𑀯𑀭𑁆𑀓𑀡𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑁄𑁆𑀵𑀼𑀓𑀼 𑀯𑀸𑀷𑁆 (𑁥𑁤𑁣𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman
Oruvarkan Nindrozhuku Vaan
— (Transliteration)


paruvaralum paitalum kāṇāṉkol kāmaṉ
oruvarkaṇ niṉṟoḻuku vāṉ.
— (Transliteration)


Can't the god of Love, lodged in me alone Causing distress, see my pallor and pain?

ஹிந்தி (हिन्दी)
जम कर सक्रिय एक में, रहा मदन बेदर्द ।
क्या वह समझेगा नहीं, मेरा दुःख व दर्द ॥ (११९७)


தெலுங்கு (తెలుగు)
మరచుటన్న మాటె మండించు హృదయమ్ము
మరచి బ్రతుకు మాట మాట యగునె. (౧౧౯౭)


மலையாளம் (മലയാളം)
പ്രണയത്തിലൊരാൾ മാത്രം കാമൻറെ ലക്ഷ്യമാകുകിൽ അതിനാലേർപ്പെടും താപകാഠിന്യമറിയില്ലയോ? (൲൱൯൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕಾಮನು ಒಬ್ಬರ ಪಕ್ಷದಲ್ಲಿಯೇ ನೆಲೆಯಾಗಿ ನಿಂತು ನೋವು ವ್ಯರ್ಥಗಳನ್ನು ತಂದೊಡ್ಡುತ್ತಿರುವನು! ಅದು ಅವನಿಗೆ ಗೊತಾಗದಷ್ಟು ನಿರ್ದಯನೆ ಅವನು? (೧೧೯೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
रक्तकामुकयोर्मध्ये वसन्नेकत्र केवलम् ।
मदीयदु:खवैवर्ण्ये जानीयान्मदन: कथम् ॥ (११९७)


சிங்களம் (සිංහල)
එකකු ළඟ පමණක් - හැසිරෙන කාමයාණනි, මට ඇති චකිතයත් - දුකත් නො පෙනෙන්නෙ කිම ඔබ හට (𑇴𑇳𑇲𑇧)

சீனம் (汉语)
愛神何以於妾心偏? 豈未見妾之憂苦耶? (一千一百九十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Dewa Chinta hanya menyerang diri-ku: apa-kah kerana tidak di- lihat-nya kesedehan dan penderitaan-ku?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
사랑의신은단지창백함과비탄을알지못하는처녀를괴롭힌다. (千百九十七)

உருசிய (Русский)
Неужели бог любви Кама, живущий во мне, не видит моих страданий?

அரபு (العَرَبِيَّة)
إله الحب يهاجم على فقط هذا بسبب أنه لا يملك العينين يرى بهما احزانى وآلامى ويواسينى (١١٩٧)


பிரெஞ்சு (Français)
Le dieu do l'amour qui n'assaillit qu'un des deux (homme ou femme) ne connaît donc pas la maladie et l'excès de souffrance de celui qu'il assaillit?

ஜெர்மன் (Deutsch)
Kennt der Liebesgott keine Falschheit, keine Pein? - Er wohnt auf einer Seite.

சுவீடிய (Svenska)
Har månne Kärleksguden, som blott plågar ena parten, icke lagt märke till min blekhet och min sorg?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Solam me petit Amor. Nnm dolores · ct angorcs mei eum fuginnt? (MCXCVII)

போலிய (Polski)
Czemu Dawca kochania ją tak umiłowal, Že wyróżnił zdolnością lubienia?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22