பிரிவாற்றாமை

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.   (௲௱௬௰ - 1160) 

காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி, அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்!  (௲௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.  (௲௱௬௰)
— மு. வரதராசன்


சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.  (௲௱௬௰)
— சாலமன் பாப்பையா


காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?  (௲௱௬௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀺𑀢𑀸𑀶𑁆𑀶𑀺 𑀅𑀮𑁆𑀮𑀮𑁆𑀦𑁄𑀬𑁆 𑀦𑀻𑀓𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑀺𑀭𑀺𑀯𑀸𑀶𑁆𑀶𑀺𑀧𑁆
𑀧𑀺𑀷𑁆𑀇𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀭𑁆 𑀧𑀮𑀭𑁆 (𑁥𑁤𑁠)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aridhaatri Allalnoi Neekkip Pirivaatrip
Pinirundhu Vaazhvaar Palar
— (Transliteration)


aritāṟṟi allalnōy nīkkip pirivāṟṟip
piṉiruntu vāḻvār palar.
— (Transliteration)


Strange how many can bear separation, Survive sorrow, and live!

ஹிந்தி (हिन्दी)
दुखद विरह को मानती, चिन्ता व्याधि न नेक ।
विरह-वेदना सहन कर, जीवित रहीं अनेक ॥ (११६०)


தெலுங்கு (తెలుగు)
సాగనంపి బాధ సహియించి జీవింప
నిష్టపడెడివార లెంద రిలను. (౧౧౬౦)


மலையாளம் (മലയാളം)
അനിഷ്ടമാം വേർപാടിൻറെയസഹ്യ ദുഃഖവും പേറി ഗതിയില്ലാതനേകം പേരുയിർ വാഴുന്നു ഭൂമിയിൽ (൲൱൬൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
(ಇನಿಯನ್ನು) ವಿರಹವನ್ನು ಕುರಿತು ತಿಳಿಸುವಾಗ, ಅದನ್ನು ಸಹಿಸಿಕೊಂಡು, ಕಷ್ಟ ಪರುಪರೆಗಳನ್ನು ಮರೆತು, ಉಂಟಾದ ವಿರಹವನ್ನೂ ತಾಳಿಕೊಂಡು ಆಮೇಲೂ ಉಸಿರೊಡನೆ ಬಾಳುವ ಹೆಣ್ಣು ಕುಲದವರು ಹಲವರಿದ್ದಾರೆ! ವಿಚಿತ್ರ. (೧೧೬೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अङ्गीकृत च विश्‍लेषमनवाप्य ततो व्यथाम् ।
सोढ्वा वियोगं जीवन्त्य: सन्त्यनेका: स्त्रियो भुवि ॥ (११६०)


சிங்களம் (සිංහල)
ඉවසීමෙන් වියොව - කාමුක රෝග වළකා හුදකලාව ම හිඳ- දිවි ගෙවන්නෝ බොහෝ වෙත් මැයි (𑇴𑇳𑇯)

சீனம் (汉语)
世之婦人, 多有忍耐良人離別之痛古, 直侍其歸來始已者. (一千一百六十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Banyak-lah mereka yang dapat mengatasi kepedehan berpisah dan hidup sa-hingga kembali-nya kekaseh kapada-nya!
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
많은여성들이이별을인내하며생존하고고통을참는다. (千百六十)

உருசிய (Русский)
Я удивляюсь, сколь много есть людей, перенесших боль любви и разлуку. Мне это не под силу

அரபு (العَرَبِيَّة)
هناك رجال كثيرون يتحملون مشقات الفراق ويبقون حيا إلى أن يرجه اليهم احبتهم (١١٦٠)


பிரெஞ்சு (Français)
(Tu dis vrai!) Nombreuses sont celles qui supportent l'avis de la séparation, qui y consentent même, qui endurent la douleur de la séparation, et qui y survivent en se faisant à la solitude.

ஜெர்மன் (Deutsch)
Es gibt so viele, die dem Unmöglichen zustimmen: den Schmerz töten, die Trennung ertragen und doch weiterleben.

சுவீடிய (Svenska)
Det finns dock många som uthärdar det omöjliga, som övervinner sorgens smärta och finner sig i skilsmässan men lever vidare ändå!
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Socia dominae: multae mulieres, inquit, clolorem tolerant, tu non toleras - dornina respoudet (ironice): Quae gravia tolerent, acerbum dolorem depellant , discessmn tolerent et in vita. mnneaut, multae snnt! (MCLX)

போலிய (Polski)
Jak zazdroszczę tej żonie, co męża doczeka, Bo jej płomień rozłąki nie spalił.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22