புணர்ச்சி மகிழ்தல்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.   (௲௱௬ - 1106) 

அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்!  (௲௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  (௲௱௬)
— மு. வரதராசன்


இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.  (௲௱௬)
— சாலமன் பாப்பையா


இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்  (௲௱௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀶𑀼𑀢𑁄𑀶𑀼 𑀉𑀬𑀺𑀭𑁆𑀢𑀴𑀺𑀭𑁆𑀧𑁆𑀧𑀢𑁆 𑀢𑀻𑀡𑁆𑀝𑀮𑀸𑀮𑁆 𑀧𑁂𑀢𑁃𑀓𑁆𑀓𑀼
𑀅𑀫𑀺𑀵𑁆𑀢𑀺𑀷𑁆 𑀇𑀬𑀷𑁆𑀶𑀷 𑀢𑁄𑀴𑁆 (𑁥𑁤𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Urudhoru Uyirdhalirppath Theentalaal Pedhaikku
Amizhdhin Iyandrana Thol
— (Transliteration)


uṟutōṟu uyirtaḷirppat tīṇṭalāl pētaikku
amiḻtiṉ iyaṉṟaṉa tōḷ.
— (Transliteration)


Her shoulders must verily be nectar For they refresh my life whenever I touch.

ஹிந்தி (हिन्दी)
लगने से हर बार है, नवजीवन का स्पंद ।
बने हुए हैं अमृत के, इस मुग्धा के स्कंध ॥ (११०६)


தெலுங்கு (తెలుగు)
కలికి కరములందు గల దమృతం బొకో
తాకినంతఁ దనియుచుండు నొడలు. (౧౧౦౬)


மலையாளம் (മലയാളം)
ചേരും നേരമുയിർവാട്ടം വെടിഞ്ഞു തളിർക്കുന്നതാൽ ഇവളിൻ തോളമൃതത്താൽ മാത്രം സൃഷ്ടിച്ചതാവണം (൲൱൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪ್ರತಿ ಸಾರಿಯ ಅಪ್ಪುಗೆಯಲ್ಲೂ ನನ್ನ ಪ್ರಾಣವನ್ನು ಚಿಗುರಿಸುವ ಸ್ಪರ್ಶದಿಂದ ಹೊಸ ಚೇತನವನ್ನು ನೀಡುವುದರಿಂದ, ಈ ಮುಗ್ದೆಯ ತೋಳುಗಳು ಅಮೃತದಿಂದ ಕಡೆದಂತೆ ತೋರುತ್ತಿವೆ. (೧೧೦೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
नष्ट: प्राण: पुनर्यस्य स्पर्शमात्रेण जीवति ।
तेनामृतेन रचितौ तस्या: स्कन्धाविति ध्रुवम् ॥ (११०६)


சிங்களம் (සිංහල)
ඔවුනොවුන් ගෑවෙන - සහවාසයක් පාසා ඇගෙ තරුණ උරතල - අමායෙන් සැදුනකැ යි හැඟුනා (𑇴𑇳𑇦)

சீனம் (汉语)
彼淑女之玉臂, 有仙藥之力, 每一觸余, 能使余肢鵂獲新生. (一千一百六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Tangan gadis-ku suchi sa-olali2 di-bentok dari makanan dewa2: kerana sentoh-nya sahaja dapat menghidupkan kembali anggota-ku yang hampir mati.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
처녀의어깨는신성한꿀로만들어졌다; 그녀를껴안자그의처진기분이되살아난다. (千百六)

உருசிய (Русский)
Нежные плечи моей возлюбленной подобны напитку бессмертия,,бо прикасаясь к ним, я вновь и вновь возвращаюсь к жизни

அரபு (العَرَبِيَّة)
ذراعى المحبوبة مصنوعتان من طعام الآلهة فلذلك تنتعش ضلوعى الكاسدة الخامدة عند ما ألمسها (١١٠٦)


பிரெஞ்சு (Français)
Les bras de cette jeune ingénue sont faits d'ambroisie palpable, parce que par le simple attouchement, ils raniment ma vie qui dépérissait, faute de la posséder.

ஜெர்மன் (Deutsch)
Die Schultern dieses Mädchens sind wie aus Nektar gemacht - sie erneuern mich jedes Mal, wenn ich sie umarme.

சுவீடிய (Svenska)
Med odödlighetssalva är min skönas skuldror bestrukna. Närhelst jag berör dem vaknar min kropp till liv.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quotics tango, vita mea tactugermiuat, Ex ambrosia igitur facti sunt puellue humeri. (MCVI)

போலிய (Polski)
Swym dotykiem wyzwala w mej piersi natchnienie, Jak modlitwę u swego ołtarza.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22