குறிப்பறிதல்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.   (௲௱ - 1100) 

காமத்திற்கு உரிய இருவருள், ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால், அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை  (௲௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.  (௲௱)
— மு. வரதராசன்


காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.  (௲௱)
— சாலமன் பாப்பையா


ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன  (௲௱)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀡𑁆𑀡𑁄𑁆𑀝𑀼 𑀓𑀡𑁆𑀇𑀡𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑁄𑁆𑀓𑁆𑀓𑀺𑀷𑁆 𑀯𑀸𑀬𑁆𑀘𑁆𑀘𑁄𑁆𑀶𑁆𑀓𑀴𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷 𑀧𑀬𑀷𑀼𑀫𑁆 𑀇𑀮 (𑁥𑁤)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kannotu Kaninai Nokkokkin Vaaichchorkal
Enna Payanum Ila
— (Transliteration)


kaṇṇoṭu kaṇiṇai nōkkokkiṉ vāyccoṟkaḷ
eṉṉa payaṉum ila.
— (Transliteration)


When eyes with eyes commingle, What do words avail?

ஹிந்தி (हिन्दी)
नयन नयन मिल देखते, यदि होता है योग ।
वचनों का मूँह से कहे, है नहिं कुछ उपयोग ॥ (११००)


தெலுங்கு (తెలుగు)
కండ్లు కండ్లుతోడ గలసిన పిమ్మట
మాటలేటి కింక నోటిచేటు. (౧౧౦౦)


மலையாளம் (മലയാളം)
കണ്ണോടുകണ്ണുയോജിച്ചു രാഗമൂർച്ചവരുത്തുകിൽ വചനം കൈമാറുന്നതിലേതുമില്ല പ്രയോജനം (൲൱)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕಣ್ಣೊಡನೆ ಕಣ್ಣುಗಳು ಒಂದಾಗಿ ಕೂಡಿ ಒಲವು ಸಂಭಾಷಣೆ ನಡೆಸಿದಲ್ಲಿ ಬರಿಯ ಬಾಯಿ ಮಾತುಗಳಿಂದ ಯಾವ ಪ್ರಯೋಜನವೂ ಇರುವುದಿಲ್ಲ. (೧೧೦೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
लोके कामुकयोनेंत्रे यदि प्रेम्णा परस्परम् ।
पश्येतां, तहिं वचसा भाषणे किं प्रयोजनम् ॥ (११००)


சிங்களம் (සිංහල)
නෙතට නෙත එකඟව - නෙත් සැර යවා බැලු නම් කට වචනයෙන් එන - කිසිදු කිසිවිට පලක් නොම වේ (𑇴𑇳)

சீனம் (汉语)
兩目交視, 心靈相通之頃, 不須言語也. (一千一百)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Bila mata menyatakan persetujuan kapada mata, kata2 dari mulut tiada-lah bererti lagi.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
연인들이눈을통해사랑의메시지를전할때단어는 소용없다. (千百)

உருசிய (Русский)
Когда глаза разговаривают с глазами, в словах нет нужды

அரபு (العَرَبِيَّة)
إن تتحدث العينان إلى العينين بما يدور فى قلبيهما فلا حاجة أن يتقوه بها احدهما او كلاهما (١١٠٠)


பிரெஞ்சு (Français)
Lorsque les yeux s'unissent aux yeux par les regards, les paroles sont inutiles.

ஜெர்மன் (Deutsch)
Stimmt Auge mit Auge überein, sind Worte des Mundes überflüssig.

சுவீடிய (Svenska)
När ögonens blickar speglar ett hemligt samförstånd är talade ord till ingen nytta alls.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si oculi cum oculis adspectu congruunt, oris scrmo prorsus in- utilis est. (MC)

போலிய (Polski)
Lecz gdy oczy ślą listy i wnet je czytają, Niepotrzebne są usta i słowa.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22