தகையணங்குறுத்தல்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.   (௲௮௰௯ - 1089) 

மானின் பிணைபோன்ற மடநோக்கினையும், உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு, இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்தல் ஏனோ?  (௲௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.  (௲௮௰௯)
— மு. வரதராசன்


பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?  (௲௮௰௯)
— சாலமன் பாப்பையா


பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?  (௲௮௰௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀺𑀡𑁃𑀬𑁂𑀭𑁆 𑀫𑀝𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑀸𑀡𑀼𑀫𑁆 𑀉𑀝𑁃𑀬𑀸𑀝𑁆𑀓𑀼
𑀅𑀡𑀺𑀬𑁂𑁆𑀯𑀷𑁄 𑀏𑀢𑀺𑀮 𑀢𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁢𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pinaiyer Matanokkum Naanum Utaiyaatku
Aniyevano Edhila Thandhu
— (Transliteration)


piṇaiyēr maṭanōkkum nāṇum uṭaiyāṭku
aṇiyevaṉō ētila tantu.
— (Transliteration)


What use are jewels to a damsel Adorned with modesty and meek looks of a hind?

ஹிந்தி (हिन्दी)
सरल दृष्टि हरिणी सदृश, औ’ रखती जो लाज ।
उसके हित गहने बना, पहनाना क्या काज ॥ (१०८९)


தெலுங்கு (తెలుగు)
హరిణ నేత్ర్రికేల యాభరణంబులు!
నిగ్గు దేరినట్టి సిగ్గె చాలు. (౧౦౮౯)


மலையாளம் (മലയാളം)
പേടമാൻപോൽ കുളിർ നൽകും ദർശനത്തോടെ ലജ്ജയും അഴകായുള്ളവൾക്കെന്തിന്നണിയാൻ രത്നമാലകൾ? (൲൮൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಹರಿಣವನ್ನು ಹೋಲುವ ಕಣ್ಣೋಟವೂ ಲಜ್ಜೆಯೂ ಉಳ್ಳ ಇವಳಿಗೆ (ಈ ಎಳೆವೆಣ್ಣಿಗೆ) ಇತರ ಆಭರಣಗಳಿಂದ ಅಲಂಕರಿಸಲೇಕೆ? (೧೦೮೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
हरिणीदृष्टिसदृशदृष्टया प्रकृतिलज्जया ।
सहिताया रमण्यास्तु मण्डनैर्मण्डनं वृथा ॥ (१०८९)


சிங்களம் (සිංහල)
විළි බිය දෙක උපන් - මුව බැල්ම ඇති තරුණිය මිණි මුතු රන් බරණ - කුමට පළදින්නෙහිද නො දනිමි (𑇴𑇱𑇩)

சீனம் (汉语)
伊人天眞嫻雅, 何用寶飾? 飾物徒足損其純潔之美耳. (一千八十九)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apa-lah guna-nya perhiasan yang hanya menchachatkan kechantck- an-nya sahaja, apabila kesopanan-nya serta mata-nya yang sapcrti mata anak rusa menjadi perhiasan istimewa-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
온유하고겸손한외모를가진이처녀의아름다움에더할수있는보배는없다. (千八十九)

உருசிய (Русский)
Разве нужны какие-либо украшения для красавицы с чудными юными глазами и робкой стыдливостью?

அரபு (العَرَبِيَّة)
ما هي فائدة القرطين فى شحمة أذنى الحسناء إذ أنهما يشوهان حسنها وجمالها الا يكفى لها العينان والحياء اللذان هما من أكبر زينة للمراءة الجميلة (١٠٨٩)


பிரெஞ்சு (Français)
Alors que son regard, ingénu comme celui de la biche et sa modestie lui sont une parure naturelle, de quelle utilité sont donc ces parures artificielles?

ஜெர்மன் (Deutsch)
Besitzt sie rehgleich zarte Blicke und Scheu – was soll das Tragen anderer Juwelen?

சுவீடிய (Svenska)
Vad behövs väl mer som smycken för denna blyga flicka än hennes egen rådjursskygga blick?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Ei, quae teneram faciem venustate cervae atque pudorem habet, alia induere, quid esset ornamenti? (MLXXXIX)

போலிய (Polski)
Wdzięku sarny przybranej w klejnoty skromności Nie pomnożą kosztowne pierścienie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22