தகையணங்குறுத்தல்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.   (௲௮௰௩ - 1083) 

‘கூற்று’ என்பதனை இதன்முன்னர் அறியேன்; இப்போது அறிந்துவிட்டேன்; அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது  (௲௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது  (௲௮௰௩)
— மு. வரதராசன்


எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.  (௲௮௰௩)
— சாலமன் பாப்பையா


கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை  (௲௮௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀡𑁆𑀝𑀶𑀺𑀬𑁂𑀷𑁆 𑀓𑀽𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆 𑀧𑀢𑀷𑁃 𑀇𑀷𑀺𑀬𑀶𑀺𑀦𑁆𑀢𑁂𑀷𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀝𑀓𑁃𑀬𑀸𑀮𑁆 𑀧𑁂𑀭𑀫𑀭𑁆𑀓𑁆 𑀓𑀝𑁆𑀝𑀼 (𑁥𑁢𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pantariyen Kootren Padhanai Iniyarindhen
Pentakaiyaal Peramark Kattu
— (Transliteration)


paṇṭaṟiyēṉ kūṟṟeṉ pataṉai iṉiyaṟintēṉ
peṇṭakaiyāl pēramark kaṭṭu.
— (Transliteration)


I never knew yama before, but now I realize That it is feminine and has warring eyes.

ஹிந்தி (हिन्दी)
पहले देखा है नहीं, अब देखा यम कौन ।
लडते विशाल नेत्रयुत, वह है स्त्री-गुण-भौन ॥ (१०८३)


தெலுங்கு (తెలుగు)
ఎఱుంగ నెముడనంగ నెవ్వాడొ మున్ముందు
కంటి దేవి వెడద కండ్లనిపుడు. (౧౦౮౩)


மலையாளம் (മലയാളം)
കേട്ടറിഞ്ഞുള്ള യമനെയിപ്പോൾ നേരിട്ടുകണ്ടുഞാൻ പെൺസ്വഭാവത്തുടൻ നീണ്ട ലോചനങ്ങളുമുള്ളതാം (൲൮൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಈ ಹಿಂದೆ ಕಾಲನನ್ನು ಕಣ್ಣು ಅರಿಯೆನು. ಈಗ ಕಂಡು ಅರಿತೆನು; ಅದು ಹೆಣ್ತನದ ಸಹಾಯದಿಂದ ಹೋರಾಟ ನಡೆಸುವ ಕಣ್ಣುಳ್ಳದು ಎಂದು. (೧೦೮೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अन्तको न मया पूर्व दृष्ट:, पश्यामि सम्प्रति ।
क्रूराक्षश्चाङ्गनारूपो जीवत्येष न संशय: ॥ (१०८३)


சிங்களம் (සිංහල)
දිගු නෙතැති තරුණිය - මා ළය පෙළුම් දුන්නා පෙර නො දැන විසුමුත් - දතිමි මම දැන් යමා කවුරුද? (𑇴𑇱𑇣)

சீனம் (汉语)
死神非余所知, 而今知之矣. 彼作婦人相, 杏眼流波以资人者非耶? (一千八十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Tidak pernah ku-kenal Maut dahulu: sekarang ku-tahu sudah: Maut datang-nya dalam bentok wanita yang besar dan garang pula mata- nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
그는죽음의신을전혀몰랐다. 이제 처녀의 겉모습과 교전중인눈을통해죽음의신을본다. (千八十三)

உருசிய (Русский)
До сих пор я не знал, каков бог небытия Яма. Теперь он предстал передо мною в облике красавицы с карповидными глазами и смелым взглядом

அரபு (العَرَبِيَّة)
لم أكن أعرف من قبل ما هو الموت؟ والأن قد علمت لأن الموت يظهر فى زي حيسنة جميلة بعينيها الواسعة القتالة (١٠٨٣)


பிரெஞ்சு (Français)
T'ai entendu parler de l'Exterminateur (Ya men), mais je ne l'avais pas connu. Je l'ai connu maintenant: II a des yeux qui livrent un combat violent et avec les qualités féminines: (modestie, ingénuité, peur et chasteté).

ஜெர்மன் (Deutsch)
Ich kannte die Gestalt des Todes nicht - nun weiß ich, er hat weibliche Tugenden und kämpferische Augen.

சுவீடிய (Svenska)
Förr visste jag ej vem Dödsguden <Yama> var. Nu vet jag: den har en kvinnas form med stora blixtrande ögon.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Mors quondam mihi ignota fuit; nunc novi; cum natura mu- liebri oculos habet valde pugnaces. (MLXXXIII)

போலிய (Polski)
Nie sądziłem, ażeby bóg śmierci i trwogi* Przybrał kształt tak skończenie uroczy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22