இரவச்சம்

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.   (௲௬௰௬ - 1066) 

வேட்கை மிகுதியாலே சாகும் பசுவுக்கு இரக்கங்கொண்டு ‘நீர் தருவீராக’ என்று இரந்தாலும், அதனைப் போல நாவிற்கு இழிவான ஒரு செயல் யாதும் இல்லை  (௲௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.  (௲௬௰௬)
— மு. வரதராசன்


பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.  (௲௬௰௬)
— சாலமன் பாப்பையா


தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை  (௲௬௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀯𑀺𑀶𑁆𑀓𑀼 𑀦𑀻𑀭𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀇𑀭𑀧𑁆𑀧𑀺𑀷𑀼𑀫𑁆 𑀦𑀸𑀯𑀺𑀶𑁆𑀓𑀼
𑀇𑀭𑀯𑀺𑀷𑁆 𑀇𑀴𑀺𑀯𑀦𑁆𑀢 𑀢𑀺𑀮𑁆 (𑁥𑁠𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aavirku Neerendru Irappinum Naavirku
Iravin Ilivandha Thil
— (Transliteration)


āviṟku nīreṉṟu irappiṉum nāviṟku
iraviṉ iḷivanta til.
— (Transliteration)


No greater disgrace for the tongue than to beg Even if only water for a cow.

ஹிந்தி (हिन्दी)
यद्यपि माँगे गाय हित, पानी का ही दान ।
याचन से बदतर नहीं, जिह्वा को अपमान ॥ (१०६६)


தெலுங்கு (తెలుగు)
ఆవుకైన నీళ్ళ నడుగరాదొక్కని
నాల్కగొప్ప కఫుడె నాశనమ్ము. (౧౦౬౬)


மலையாளம் (മലയാളം)
പശുവിന്ന് കൊടുപ്പാനാണെങ്കിലും ജലയാചന ധർമ്മകർമ്മത്തിനായിടും നാവിന്നിഴിവ് ചേർത്തിടും (൲൬൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸಾಯುವ ಸ್ಥಿತಿಯಲ್ಲಿರುವ ಹಸುವಿಗಾಗಿ ಕರುಣೆಯಿಂದ ನೀರನ್ನು ಬೇಡುವ ಸ್ಥಿತಿ ಬಂದರೂ ಬೇಡುವ ನಾಲಿಗೆಗೆ ಅದಕ್ಕಿಂತ ಅವನತಿ ಬೇರಿಲ್ಲ. (೧೦೬೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
पशुरक्षणधार्मार्थं जलयाचनरूपकम् ।
कर्मापि याचनाकर्तु: जिह्वाया दोषदं भवेत् ॥ (१०६६)


சிங்களம் (සිංහල)
කිරි දෙනකට වතුර - යැදුමත් නීච කම මෙන් කෑමට හිත කැමති - දැයට යැදුමන් නිචකම මැ යි (𑇴𑇯𑇦)

சீனம் (汉语)
卽使乞水以飲其牛, 開口告人, 亦足爲恥矣. (一千六十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Walau sekedar ayer untok lembu kamu mengemis, tiada-lah yang paling hina kapada lidah daripada melafazkan permintaan-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
심지어소에게공급할물조차구걸하는입은큰치욕이리라. (千六十六)

உருசிய (Русский)
Что есть постыднее, чем язык, вымаливающий подаяние,,аже если ты просишь всего лишь воду для коровы

அரபு (العَرَبِيَّة)
مع أنك تطلب الماء لبقرتك ولكن لا يستحسن لك أن تطلب هذاالماء من أحد فى حالة الخضوع والتذلل (١٠٦٦)


பிரெஞ்சு (Français)
Il n'y a rien de plus déshonorant pour la langue, que de demander, par compassion, de l’eau pour une vache assoiffée, que l'on a rencontrée mourante.

ஜெர்மன் (Deutsch)
Ist es auch nur um Wasser für die Kuh - nichts ist erniedrigender für die Zunge als dieses Betteln.

சுவீடிய (Svenska)
Även om det man bad om blott vore vatten för kon finns det intet så förnedrande för tungan som att tigga.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quamvis tantummodo aquam vaccae mendicet, nihil linguae turpius obvenit quam mcndicare. (MLXVI)

போலிய (Polski)
Nie proś nawet o wodę, bo jedna konewka Dla twej krowy zatruje ci życie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22