இரவு

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.   (௲௫௰௮ - 1058) 

வறுமையால் இரப்பவர் இல்லையானால், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகினரின் போக்கும் வரவும், மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்றுவந்தாற் போன்றதாகும்  (௲௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.  (௲௫௰௮)
— மு. வரதராசன்


பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.  (௲௫௰௮)
— சாலமன் பாப்பையா


வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை  (௲௫௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀭𑀧𑁆𑀧𑀸𑀭𑁃 𑀇𑀮𑁆𑀮𑀸𑀬𑀺𑀷𑁆 𑀈𑀭𑁆𑀗𑁆𑀓𑀡𑁆𑀫𑀸 𑀜𑀸𑀮𑀫𑁆
𑀫𑀭𑀧𑁆𑀧𑀸𑀯𑁃 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀯𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁥𑁟𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Irappaarai Illaayin Eernganmaa Gnaalam
Marappaavai Sendruvan Thatru
— (Transliteration)


irappārai illāyiṉ īrṅkaṇmā ñālam
marappāvai ceṉṟuvan taṟṟu.
— (Transliteration)


Without beggars this vast scenic world Would be a stage of puppets that come and go.

ஹிந்தி (हिन्दी)
शीतल थलयुत विपुल जग, यदि हो याचक-हीन ।
कठपुथली सम वह रहे, चलती सूत्राधीन ॥ (१०५८)


தெலுங்கு (తెలుగు)
అడుగువారు లేమిఁ దడిగల భూమిపై
ప్రతిమలు తిరుగాడు గతి దలంప. (౧౦౫౮)


மலையாளம் (മലയാളം)
ഭിക്ഷാടാകരില്ലാവീട്ടാൽ ഭുമുഖത്തുള്ള ജീവിതം കയറാൻ ചലിക്കുംപോലാം മരത്തിൽ ചെയ്ത പാവകൾ (൲൫൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬೇಡುವವರೇ ಇಲ್ಲವಾದರೆ, ಈ ತಂಪಾದ ವಿಶಾಲ ಭೂಮಿಯಲ್ಲಿ ವಾಸಿಸುವ ಜನರ ಚಲನೆಯು, ಸೂತ್ರದಿಂದ ಆಡಿಸುವ ಮರದ ಬೊಂಬೆಯ ಚಲನೆಗೆ ಹೋಲುವುದು. (೧೦೫೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
याचकानामभावे तु नराणां भुवि जीवनम् ।
सूत्राकृष्टचलद्दारुबिम्बवत् कृत्रिमं भवेत् ॥ (१०५८)


சிங்களம் (සිංහල)
නො මැති සඳ ලෙව්හී - යදි දන සිඟා වඩනා ලො වැසි හැම දෙනා - තැනුව රූකඩ පරිදි හැසිරෙත් (𑇴𑇮𑇨)

சீனம் (汉语)
大地若無乞食者, 擧世之人將行動若傀儡, 而無善施之樂矣. (一千五十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Jika tiada orang yang meminta sedekah, seluroh dunia ini tiada lebeh erti-nya daripada tarian patong di-panggong.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
거지가없는거대한세상은단지꼭두각시인형극과유사하리라. (千五十八)

உருசிய (Русский)
Если бы не было нищих, то этот мир приятный уподобился сцепе с пляшущими куклами *

அரபு (العَرَبِيَّة)
إن لم يكن هناك احد يطلب الخير فاذن لا معنى لوجود هذه الأرض يرى كأن الدمى الخشبية ترقص على صفحتها (١٠٥٨)


பிரெஞ்சு (Français)
S’il n’y pas de mendiants qui mendient, le va et vient des habitants de cette grande étendue de terre aux endroits frais, ressemblera à une danse de marionnettes de bois.

ஜெர்மன் (Deutsch)
Ohne Bettler ist die große Welt wie eine hölzerne Puppe, die sich hierhin und dorthin bewegt.

சுவீடிய (Svenska)
Om det icke fanns människor som tiggde skulle denna stora värld med dess svala orter vara lik en plats där trädockor vandrar fram och åter.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si nulli essent mendici , ampla terra locis frigidis plena pupae ligneae instar iret et rediret, (MLVIII)

போலிய (Polski)
Gdyby nędzy zupełnie nie było w królestwie, Ludzie byliby sztywni jak lale.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22