இரவு

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.   (௲௫௰௭ - 1057) 

தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால், இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து, உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு  (௲௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.  (௲௫௰௭)
— மு. வரதராசன்


அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.  (௲௫௰௭)
— சாலமன் பாப்பையா


இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்  (௲௫௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀓𑀵𑁆𑀦𑁆𑀢𑁂𑁆𑀴𑁆𑀴𑀸𑀢𑀼 𑀈𑀯𑀸𑀭𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑀺𑀷𑁆 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀼𑀴𑁆𑀴𑀫𑁆
𑀉𑀴𑁆𑀴𑀼𑀴𑁆 𑀉𑀯𑀧𑁆𑀧𑀢𑀼 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁟𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ikazhndhellaadhu Eevaaraik Kaanin Makizhndhullam
Ullul Uvappadhu Utaiththu
— (Transliteration)


ikaḻnteḷḷātu īvāraik kāṇiṉ makiḻntuḷḷam
uḷḷuḷ uvappatu uṭaittu.
— (Transliteration)


The glad heart rejoices within When it sees one who gives without scorn.

ஹிந்தி (हिन्दी)
बिना किये अवहेलना, देते जन को देख ।
मन ही मन आनन्द से, रहा हर्ष-अतिरेक ॥ (१०५७)


தெலுங்கு (తెలుగు)
పరిహాసించి తిట్టి పంపక నిచ్చెడి
వారిఁ జూడ నర్ధి గొరుచుండు. (౧౦౫౭)


மலையாளம் (മലയാളം)
ഹീനവാക്യമുരക്കാതെ തൃപ്തിയിൽ ഭിക്ഷനൽകിയാൽ യാചകന്നകമാനന്ദം കൊണ്ടു നിർഭരമായിടും (൲൫൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತೆಗಳಿ ನಿಂದನೆ ಮಾಡದೆ ಕೊಡುಗೈಯಿಂದ ಕೊಡುವವರನ್ನು ಕಂಡರೆ ಬೇಡುವವರ ಮನಸ್ಸು ಆನಂದದಿಂದ ಒಳಗೊಳಗೇ ಸಂತೋಷಪಡುತ್ತದೆ. (೧೦೫೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रीतिपूर्वं गौरवेण याचकेभ्य: प्रयच्छत: ।
दातृन् दृष्ट्वा याचकस्तु मनस्यन्त: प्रमोदते ॥ (१०५७)


சிங்களம் (සිංහල)
නින්දා අපහාස - නො කරම දුටුව දෙන දන සිඟන දුක නැති වී - සොම්නසින් හද ඉපිල යාවි (𑇴𑇮𑇧)

சீனம் (汉语)
仁人施捨而面無難色, 口無惡聲, 乞食者遇之, 心將歡矣. (一千五十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah mereka yang memberi dengan tidak menghina atau pun menyinggong si-peminta: hati si-peminta akan bergerang ria bila bertemu dengan-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
멸시하지않고구호품을주는자를만날때, 거지의마음은환호한다. (千五十七)

உருசிய (Русский)
В душе просящего милостыню рождается радость в миг: едва он видит человека, щедро дающего ему милостыню без поучении и укоризны

அரபு (العَرَبِيَّة)
إن الذين يتبرعون بأموالهم للناس بغير زجر ونهر – الفقراء يشعرون بالفرح والسرور عند ما يلاقونهم (١٠٥٧)


பிரெஞ்சு (Français)
Le cœur du pauvre se réjouit et se dilate, lorsqu’il rencontre des hommes qui donnent, sans le mépriser et sans l’injurier.

ஜெர்மன் (Deutsch)
Trifft man einen, der ohne Beleidigungen gibt, ist man erfreut und jubelt in seinem Herzen.

சுவீடிய (Svenska)
Om han möter frikostiga människor som ej är föraktfulla fröjdar sig tiggaren med glädje i sin själ.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si invenitur , qui sine objurgatione et conviciis largiatur , id ita comparatum est, ut (petentis) animus in intimo pectore diffusus exsultet. (MLVII)

போலிய (Polski)
Nędzarz jest pokrzepiony w swym ludzkim jestestwie, Gdy traktuje go ktoś poufale.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22